| சொல்லதிகாரம் | 204 | முத்துவீரியம் |  
  
(வி-ரை.) ‘தம்வினைக்
கியலும் எழுத்தலங் கடையெ’ என்ற ஈற்றடியோடு
இந்நூற்பா 
 தொல்காப்பியத்தில் இடம்
பெற்றுள்ளது. (93) 
அடுக்கு 
736. அசைநிலை யிசைநிறை
யடுக்கிரு திறத்தன. 
(இ-ள்.) அசைநிலையும்,
இசைநிறையும் என அடுக்கு இரண்டு திறத்தனவாம். 
(வ-று.) மற்றோ மற்றோ,
அன்றோ வன்றோ, அசைநிலை; ஏஏஏஏ யம்பன 
மொழிந்தனளே, இசைநிறை. (94) 
அறுவகைத் தொகைச்
சொற்கள் 
737. வேற்றுமை வினைபண்
புவமை யும்மை 
     யன்மொழி யெனத்தொகை யறுவகைப்
படுமே. (95) 
வேற்றுமைத் தொகை 
738. 1 இரண்டு முதலா மிடையா
றுருபும் 
       வெளிப்பட லில்லது
வேற்றுமைத் தொகையே. 
(இ-ள்.) எழுவாய்க்கும்
விளிக்கும் இரண்டு முதல் ஆறுருபுகளுந் தொக்க 
தொடர்மொழி
வேற்றுமைத் தொகையாம். 
(வ-று.) நிலங்கடந்தான், ஐ; தாய்மூவர், ஓடு; கருப்புவேலி, கு:
வரைபாய்தல், இன்; 
சாத்தன் புத்தகம், அது; மன்றப்பெண்ணை, கண்;
எனவரும். (96) 
வினைத் தொகை 
739. 2 காலங் கரந்த
பெயரெச்சம் வினைத்தொகை. 
(இ-ள்.) இறப்பெதிர்வு நிகழ்வாகிய
முக்காலங்களும் தொக்க பெயரெச்சவினை 
வினைத்தொகையாம். 
(வ-று.) கொல்யானை:-
கொன்ற யானை, கொல்லும் யானை, கொல்கின்ற யானை. 
1. நன் - பொது - 12 
2. நன் - பொது - 13 
			
				
				 |