சொல்லதிகாரம் | 205 | முத்துவீரியம் |
(வி-ரை.) கொன்ற,
கொல்லும், கொல்கின்ற என்ற எச்சங்களுள் காலம்
காட்டும் ஈறுகள்
தொகின் கொல் என்றாகும்.
ஆதலின் ‘காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’
என்றனர்.
(97)
பண்புத் தொகை
740. வண்ணஞ் சுவையே வடிவே
யளவே
என்பவும் பிறவு மிதன்குண நுதலி
வரூஉ மியற்கை பண்பின்
றொகையே.
(இ-ள்.) வண்ணம், சுவை, வடிவு,
அளவு முதலியனவும் இவைபோல்வன பிறவும்
இதனது
குணத்தைக் கூறிவருவன பண்புத் தொகையாம்.
(வ-று.) கருங்குதிரை
வண்ணம்; தீங்கரும்பு சுவை; வட்டப்பலகை வடிவு; நெடுங்கோல்
அளவு. (98)
உவமைத் தொகை
741. 1உவம வுருபில துவமைத்
தொகையே.
(இ-ள்.) வினைபயன்மெய்
உருபென்பனவற்றைப் பற்றி வரும் உவமையுருபு தொக்க
தொடர்மொழி யுவமைத்தொகையாம்.
(வ-று.) புலிக்கொற்றன்,
வினை; கற்பகவள்ளல், பயன்; குரும்பை முலை, மெய்;
பவளவாய், உருபு. (99)
உம்மைத்தொகை
742. எண்ண லெடுத்த
னீட்டன் முகத்தல்
அளவையு ளும்மில தத்தொகை
யாகும்.
(இ-ள்.) எண்ணலளவை,
எடுத்தலளவை, நீட்டலளவை, முகத்தலளவைகளுள்,
உம்மைதொக்க தொடர்மொழி, உம்மைத்தொகையாம்.
(வ-று.) ஒன்றேகால்,
எண்ணல்; தொடியே கஃசு, எடுத்தல்; சாணரை, நீட்டல்;
கலனே
தூணி - முகத்தல். (100)
அன்மொழித் தொகை
743. 2 ஐந்தொகை
மொழிமேற் பிறதொக லன்மொழி.
1. நன் - பொது - 15.
2. ,, ,, 18.
|