சொல்லதிகாரம்206முத்துவீரியம்

(இ-ள்.) வேற்றுமைத் தொகை முதலிய ஐவகைத் தொகை நிலைத்தொடர்
மொழிகளுக்குப் புறத்து அவையல்லாத பிறமொழியுருபு தொக்குவருவன அன்மொழித்
தொகையாகும்.

(வ-று.) மலர்க்குழல், ஐ; பொற்றொடி, ஆல்; கவியிலக்கணம், கு; பொற்றாலி, இன்;
கிள்ளிகுடி, அது; கீழ்வயிற்றுக்கழலை, கண்; வேற்றுமைத்தொகை யுருபுகளின் புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை; பிறவுமன்ன.

(வி-ரை.) தாழ்குழல், கருங்குழல், துடியிடை, தகர ஞாழல் என்பன வினை, பண்பு,
உவமை, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைகளாகும். (101)

தொகை மொழிக்கண் பொருள் சிறக்குமாறு

744. முன்மொழி பின்மொழி இருமொழி பிறமொழி
      நிலைபெற லத்தொகை மரபுநான் காகும்.

(இ-ள்.) முன்மொழிமேல் நிற்றலும், பின்மொழிமேல் நிற்றலும், இருமொழிமேல்
நிற்றலும், பிறமொழிமேல் நிற்றலும் அத்தொகையும் அவற்றதுபொருளும் நான்காகும்.

(வ-று.) வேங்கைப்பூ - என்புழி, பூவென்னு முன்மொழிக்கண் பொருணின்றது, அது
நறிதென்னும் வினையோடியையுமாற்றான், மேற்பட்டுத் தோன்றியவாறு காண்க.
மேல்வருவனவற்றிற்கும் இஃதொக்கும், இடவகையான் முன்மொழி யாயிற்று. அடைகடல்
என்புழி அடையென்னும் பின்மொழிக்கட் பொருள்நின்றது, இடவகையாற்
பின்மொழியாயிற்று. முன்பினென்பன காலவகையால் தடுமாறி நிற்கும். வேங்கைப்பூ,
முன்மொழி; கண்ணிமை, பின்மொழி; புலிக்கெண்டை, இருமொழி; கருங்குழல்,
பிறமொழிகளிற் பொருள்சிறந்து நின்றனவாமெனவறிக.

(வி-ரை.) ‘வேங்கைப்பூ’ என்புழி வேங்கை முற்படச் சொல்லப்படுவது; பூ பிற்படச்
சொல்லப்படுவது. கால வகையால் வேங்கை முன் மொழியாகும்; பூ பின்மொழியாகும்.
ஆனால் இதுவே இடவகையான் நோக்கும்பொழுது, பூ என்பது முன்மொழியாகும். வேங்கை
என்பது பின்மொழியாகும். வலது புறமிருந்து இடது புறமாகக் கால வரையறையையும், இடது
புறமிருந்து வலது புறமாக இட வரையறையையும் கொள்க. (தொல்-சொல்-சேனா-விளக்-419)
(102)

தொகைச் சொற்கள் ஒருசொல் நடைய

745. 1 எல்லாத் தொகையு மொருசொன் னடைய.

1. தொல் - சொல் - எச்சவியல் - 24.