சொல்லதிகாரம்207முத்துவீரியம்

(இ-ள்.) அறுவகைத் தொகைச் சொற்களும் ஒரு சொல்லாய் நடத்தலை
உடையவாமென்க.

(வ-று.) யானைக்கோடு, கொல்யானை, நிலங்கடந்தான், குன்றத்திருந்தான். (103)

இடத்தொகையும் பெயர்த்தொகையும்

746. 1 வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும்
       மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும்.

(இ-ள்.) வல்லொற்றுவரின் இடத்தொகையாம் மெல்லொற்றுவரிற்
பெயர்த்தொகையாமென்க.

(வ-று.) வடுகக்கண்ணன் - இடம்; வடுகங்கண்ணன் - பெயர்.

(வி-ரை.) வடுகக்கண்ணன் - வடுகநாட்டிற் பிறந்த கண்ணன் என விரிதலின்
இடத்தொகையாயிற்று. வடுகங்கண்ணன் - வடுகனாகிய கண்ணன் என விரிதலின்
பெயர்த்தொகையாயிற்று. (104)

உயர்திணை உம்மைத்தொகை

747. 2 உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே.

(இ-ள்.) உயர்திணைக்கண் வரும் உம்மைத் தொகை பலர்க்குரிய ஈற்றானடக்கும்.

(வ-று.) பரணர், நக்கீரர், மாமூலர், கபிலர்.

(வி-ரை.) எடுத்துக்காட்டில் தனித்தனியே பலர்பால் ஈறாகக் காட்டப்பட்டுள்ளது. அது
பொருத்தமின்று. கபிலபரணர், கல்லாட மாமூலர் எனக் காட்டுவதே பொருத்தமாகும்.
உயர்திணைப் பெயராக இருந்து அதுவும் உம்மைத்தொகை படநின்று பலர்பாலுக்குரிய
ஈற்றான் நடத்தல்வேண்டும் என்பதே நூற்பாவின் கருத்தாகும். (105)

748. வாரா மரபின வரவியம் புதலும்
     என்னா மரபின வெனவியம் புதலும்
     அன்னவை யெல்லாம் அவற்றவற் றியல்பான்
     இன்ன வென்னுங் குறிப்புரை யாகும்.

(இ-ள்.) வாரா இயல்பினவற்றை வருவனவாகக் கூறலும், என்னா இயல்பினவற்றை
என்பனவாகக் கூறலும்,

1. நன் - பொது - 20.

2. ,, ,, 21.