| சொல்லதிகாரம் | 209 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.)
மேற்கூறிப்போந்த பத்தெச்சங்களும்
தத்தமனெச்சங்களோடு கூடிநடக்கும். 
(வ-று.) தானேகொண்டான் -
பிரிநிலை; உழுதுவந்தான் - வினை யெச்சம்; உண்ட 
சாத்தன் - பெயரெச்சம்; கூரியதோர்வாண்மன் -
ஒழியிசையெச்சம்; யானோ கள்வன் - 
எதிர்மறை
யெச்சம்; சாத்தனும் வந்தான் - உம்மை யெச்சம்;
ஒல்லென வொலித்தது - 
எனவெச்சம்; ‘கற்றதனா லாய
பயனென்கொல்’ (குறள்-2) சொல்லெச்சம், ‘இளைதாக 
முண்மரங்கொல்க’ (குறள்-879) குறிப்பெச்சம். (109) 
இரப்புரை 
752. ஈதா கொடுவிரப்
புரையா கும்மே. 
(இ-ள்.) ஈயென்பதும், தாவென்பதும்,
கொடுவென்பதும் ஆகிய மூன்றுசொல்லும் 
ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வரும் மொழியாம். (110) 
ஈயென் கிளவி 
753. அவற்றுள், 
     ஈயென் கிளவி யிழிந்தோ
னிரப்புரை. 
(இ-ள்.) முற்கூறியவற்றுள்,
ஈயென்னுஞ்சொல் இழிந்தவ னிரப்புரையாகும். 
(வ-று.) சோறு ஈ எனவரும். (111) 
தாஎன் கிளவி 
754. தாவென் கிளவி
சமானன் மேற்றே. 
(இ-ள்.) தாவென்னுஞ் சொல்
ஒப்போன் இரப்புரையாம். 
(வ-று.) ஆடைதா - எனவரும்.
(112) 
கொடுவென் கிளவி 
755. கொடுவென் கிளவி
யுயர்ந்தோன் கூற்றே. 
(இ-ள்.) கொடுவென்னுஞ்
சொல் உயர்ந்தோன் இரப்புரையாகும். 
(வ-று.) சாந்துகொடு
எனவரும். (113) 
			
				
				 |