சொல்லதிகாரம் | 210 | முத்துவீரியம் |
ஆகுபெயர்
756. ஒன்றன் பெயரா
னதற்கியை பிறிதை
அறைகுவ வாகு பெயரா கும்மே.
(இ-ள்.) ஒன்றனது பெயரால்
அதற்கியை பிறிதொன்றனைக் கூறல் ஆகுபெயராம்.
(வ-று.) உலகு - உயிர்; தாமரை
- தாமரைப்பூ. (114)
757. கேட்குந போலவுங் கிளக்குந போலவும்
1 இயற்றுந போலவு மியங்குந
போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே.
(இ-ள்.) கேளாதனவற்றைக் கேட்பனபோலும்,
மொழியாதனவற்றை மொழிந்தனபோலும்,
செய்யாதனவற்றைச் செய்தனபோலும், இயங்காதனவற்றை
இயங்குவனபோலும்
அஃறிணைக்கண்ணுங் கூறப்படும்.
(வ-று.) ‘நன்னீரை வாழி
யனிச்சமே’ (குறள்-1111) ‘பகைமையுங் கேண்மையுங்
கண்ணுரைக்கும்’ (குறள்-709) ‘தன்னெஞ்சே தன்னைச்
சுடும்’ (குறள்-293
இவ்வழியெங்கேபோம். (115)
ஒருசார் சொற்களின்
வழுவமைதி
758. ஒருதிணைப் பெயரொரு திணைக்காய் வருநவும்
திசைச்சொல் வாய்பாடு திரிந்து வருநவும்
இயைபில் லனவியைந் தனவாய் வருநவும்
திணைமுத லாயின திரிந்து
வருநவும்
அன்றி யனைத்துங் கடப்பா டிலவே.
(இ-ள்.) ஒருதிணைப்பெயர்
ஒருதிணைக்காய் வருவன - ஓரெருதை நம்பி - ஒரு
கிளியை நங்கையெனல்.
திசைச்சொல் வாய்பாடு
திரிந்துவருவன - புலியான், பூசையானெனல்.
தொன்னெறிக்கண்
இயைபில்லன இயைந்தனவாய் வருவன - ஆற்றுட்செந்த
வெருமையீர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்.
1. இயங்குந போலவும்
இயற்றுந போலவும் என்பது நன்னூல் (பொது - 58).
|