எழுத்ததிகாரம் | 22 | முத்துவீரியம் |
(இ-ள்.) க, ச, த, ப க்களல்லனவாகிய
பதினான்கு மெய்யும் தன்னினத்தோடும்
பிறமெய்யோடுங் கூடுங்கூட்டம் வேற்றுநிலை மெய்ம்
மயக்காகுமென்க.
(வி-ரை.) மயக்கம் -
கூட்டம். எழுத்துக்கள் ஒன்றனொடு ஒன்றுகூடி
வருங்கால்
தம்மொடுதாமே கூடிவருவனவும் தம்மோடு
பிறவே கூடிவருவனவும், தம்மொடுதாமும்
தம்மொடு
பிறவும் கூடிவருவனவும் என முத்திறமாகக் கூறப்படும்.
இவற்றுள் தம்மொடு தாம்
மயங்குவதை உடனிலை மெய்ம்மயக்கம் என்பர். தம்மொடு
பிறமயங்குவதை வேற்றுநிலை
மெய்ம்மயக்கம் என்பர். (65)
இடைநிலையின்
மறுபெயர்கள்
66. சங்கம் புணர்ச்சி
சையோக மயக்கம்
புல்லல் கலத்தலும்
பொருளொன் றேயாம்.
(இ-ள்.) சங்கமெனினும், புணர்ச்சியெனினும்,
சையோகமெனினும், மயக்கமெனினும்,
புல்லலெனினும், கலத்தலெனினும், இடைநிலை யென்னும் ஒருபொருட்கிளவி. (66)
இடைநிலை
மெய்ம்மயக்கம்
67. ஞகாரை முன்னர்க் ககார
மயங்கும்.
(இ-ள்.) ஞகரத்து முன்னர்க்
ககரம்வந்து மயங்கும்.
(வ-று). புங்கம், கொங்கம்.
(67)
இதுவுமது
68. வருஞ்சய ஞகாரமுன் மருவி
யென்ப.
(இ-ள்.) ஞகரத்துக்கு
முன்னர்ச் சகர யகரங்கள் வந்து மயங்குமென்க.
(வ-று.) கஞ்சன், உரிஞ்யாது.
(68)
இதுவுமது
69. க, ச, ப, ட கரமுற் கலந்து
மயங்கும்.
(இ-ள்.) டகரத்துக்கு
முன்னர்க் க, ச, பக்கள் வந்து மயங்கும்.
(வ-று.) வெட்கம், புட்சிறை,
நுட்பம். (69)
|