பொருளதிகாரம் | 220 | முத்துவீரியம் |
அதற்குரிய பெரும்பொழுது
788. பின்பனி தானு
முரித்தெனப் படுமே.
என்பது,
பின்பனிக்காலமும் அந்நிலத்துக்குரியன. (20)
மருதம், நெய்தற்குரிய
பெரும்பொழுதுகள்
789. மருத நெய்த லென்றிவை யிரண்டிற்கும்
உரிய பெரும்பொழு திருமூன்
றும்மே.
என்பது, மருதம் நெய்தல்
ஆகிய விரண்டு நிலனுக்கும் பெரும்பொழுதாகிய காரும்
கூதிரும் முன்பனியும் பின்பனியும் இளவேனிலும்
வேனிலு முரியன. (21)
கார்காலத்திற்குரிய
நிகழ்ச்சிகள்
790. வாடை யடித்தன்
மயில்கே கயப்புள்
இந்திர கோப மெழுந்தக
மகிழ்தல்
அன்னங் கிளிமயி லகன்று
வருதல்
காந்தள் கொன்றை காயா
மலர்தல்
கமல மேங்கல் கார்காலக்
குரித்தே.
என்பது, வாடையடித்தல்;
மயில் கேகயம் இந்திரகோபம் தோன்றி
மகிழ்தல்; அன்னம்
கிளி மயில் அகன்றுவருதல்;
காந்தள் கொன்றை காயா மலர்தல்; தாமரையேங்கல்
கார்காலத்துக்குரியன.
(வி-ரை.) இந்நூற்பா முதல்
800 ஆம் நூற்பா வரை, பெரும்பொழுது,
சிறுபொழுதிற்குரிய இயற்கை நிகழ்ச்சிகள்
குறிக்கப்பெறுகின்றன. ஆசிரியரின் புலமை நலம்
பாராட்டுதற்குரியதாகும். (22)
கூதிர்க்காலத்திற்குரிய
நிகழ்ச்சிகள்
791. கூதி ருலவை
வீசல்கொக் கொடுவால்
அன்னஞ் சங்கு மகிழ்வுற
லுதகந்
தெளிதன் மீனினஞ்
செனித்தன் முகிற்குழாஞ்
சூற்கொளல் சிறுசண்
பகமபாரி சாத
மலர்தன் மானவர்
வருந்துதல் கூதிர்க்
காலக் குரிமையாங் காணுங்
காலே.
|