பொருளதிகாரம் | 221 | முத்துவீரியம் |
என்பது, கூதிர்க்காற்
றடித்தல்; கொக்கு அன்னம் சங்கு மகிழ்தல்; நீர்தெளிதல்;
மீனினஞ்சனித்தல்; மேகங்கள் சூற்கொளல்; சிறுசண்பகம்
பாரிசாதம் மலர்தல்; மானிடர்
வருந்தல் கூதிர்க்காலக்குரியன. (23)
முன்பனிக்குரிய
நிகழ்ச்சிகள்
792. கோடை வீசல் கூகையு மாந்தையும்
மகிழ்தல் செவ்வந்தி
மாமர மலர்தல்
இலந்தை பழுத்த
லிக்குநென் முதிர்தன்
முன்பனிக் குரியவா
மொழியுங் காலே.
என்பது, கோடைக்காற் றடித்தல்;
கோட்டான் ஆந்தை மகிழ்தல்; செவ்வந்திமரம்
மாமரம் மலர்தல்; இலந்தை பழுத்தல்; கரும்பு நெல் முதிர்தல்
முன்பனிக் காலக்குரியன.
(24)
பின்பனிக்குரிய
நிகழ்ச்சிகள்
793. வீங்குல வைக்கால் வீசல்கான் கோழி
புறவ மகிழ்தல்
பொங்கருங் கோங்கு
மலர்தல் பேரீந்து மடற்பனை பழுத்தல்
பின்பனிக் குரியவாம்
பேசுங் காலே.
என்பது, உலவைக்காற்
றடித்தல்; காட்டுக்கோழி புறவு மகிழ்தல்;
இலவுகோங்கு
மலர்தல்; பேரீந்து பனை பழுத்தல் பின் பனிக்காலக்
குரியன. (25)
இளவேனிற்குரிய
நிகழ்ச்சிகள்
794. தென்ற லடித்த றேன்குறி லோடே
அன்றிலு மகிழ்தன் மாங்கனி யுதிர்தல்
மயின்மகிழ்ந் தாடன் மலர்தல் புனலின்
தாழை வசந்தந் தனக்குரித் தாகும்.
என்பது, தென்றற்காற் றடித்தல்;
வண்டு குயில் அன்றில் மகிழ்தல்;
மாங்கனி யுதிர்தல்;
மயில்மகிழ்ந்தாடல்; புன்னை
தாழை மலர்தல் இளவேனிற்காலக்குரியன. (26)
|