பொருளதிகாரம் | 222 | முத்துவீரியம் |
முதிர்வேனிற்குரிய
நிகழ்ச்சிகள்
795. கான றோன்றல்
காற்கோடை வீசல்
வலியான் காடை வான்பாடி மகிழ்தன்
மல்லிகை பாதிரி மலர்தலும் பிறவு
முதிர்வேனிற் குரியவா
மொழியுங் காலே.
என்பது,
பேய்த்தேரோடல்; கோடைக்காற் றடித்தல்;
வலியான் காடைவானம்பாடி
மகிழ்தல்; மல்லிகை
பாதிரி மலர்தல் ஆறுகாலங்களுக்கும்
முதிர்வேனிற்கும் உரியன. (27)
மாலைப்பொழுதிற்குரிய
நிகழ்ச்சிகள்
796. குவளை மலர்தல் குருகின மொலித்தல்
கன்றை யுள்ளிக் கறவை போதரல்
வனசங் கூம்பன் மாலைக்
குரிய.
என்பது, குவளைமலர்தல்;
பறவைகள் சத்தித்தல்; கன்றை நினைத்துக்
கறவைப்பசுப்போதல்; தாமரைகூம்பல் மாலைப்
பொழுதிற்குரியன. (28)
யாமப் பொழுதிற்குரிய
நிகழ்ச்சிகள்
797. கூகை சகோரங்
குழுமியுண் மகிழ்தல்
கடனீர் பொங்கல்
களவுமேம் படுதல்
யாமக் குரிமைய வாகு மென்ப.
என்பது, கோட்டான் சகோரம் மகிழ்தல்
கடல் நீரதிகப்படல் களவதிகமாதல்
யாமப்பொழுதிற்குரியன. (29)
வைகறைப் பொழுதிற்குரிய
நிகழ்ச்சிகள்
798. வைகறைக் குரியவான் மீனொளி
மழூங்கல்
வெள்ளி முளைத்தல்வா ரணங்கூ வுதலே.
என்பது,
வான்மீனொளிகெடல் வெள்ளிமுளைத்தல் கோழி கூவல்
வைகறைப்பொழுதிற்
குரியன. (30)
|