| பொருளதிகாரம் | 224 | முத்துவீரியம் |  
  
சிறுகுடி, ஊர்; அருவி,
சுனைநீர்; சந்தனம் தேக்கு அசோகுமரம் பூ; மலைநெல்
உணா; 
தொண்டகம், பறை; தினைகாத்தல் தொழில்;
குறிஞ்சியாழ், யாழ் இசை. (34) 
பாலைக்குரிய
கருப்பொருள்கள் 
803. விமலை காளை விடலை
மீளி 
     எயின ரெயிற்றியர் மறவர் மறத்தியர் 
     எருவை பருந்துசெந் நாய்குறும் புழிஞை 
     இருப்பை கூவ லிரும்பதி கவர்தல் 
     பகைத்துடி பாலையாழ்
பஞ்சுரம் வெஞ்சமம் 
     பகற்சூறை யாடல் பாலைக்
கருப்பொருளே. 
பாலைத்திணைக்
கருப்பொருள், காளி; காளை விடலை மீளி எயினர் எயிற்றியர் 
மறவர் மறத்தியர்; கழுகு, பருந்து;
செந்நாய் சிறுபூனை; இருப்பை கிணறு; பிறர் 
பெரும்பதியில் திருடல் பகைத்துடி பாலையாழ் பஞ்சுரம்
வெஞ்சமம் பகற்சூறையாடல். (35) 
முல்லைக்குரிய
கருப்பொருள்கள் 
804. திருமால் குறும்பொறை நாடன் செம்மல் 
     இல்லாள் கிழத்தி யிடைய ரிடைச்சியர் 
     ஆய ராய்ச்சிய ரடவி வாரண 
     மான்முயல் பாடி வருமா றகன்சுனை 
     கொன்றை காயா குருந்த
முல்லை 
     சாமை வரகு தரமுடன் விதைத்தல் 
     ஏற்றுப்பறை முல்லை
யாழ்சா தாரி 
     முல்லைக் கருப்பொரு
ளாமென மொழிப. 
என்பது, முல்லைத்
திணைக்கருப்பொருள், திருமால்; குறும்பொறை நாடன்
தோன்றல் 
மனைவி கிழத்தி இடையர் இடைச்சியர்
ஆயர் ஆய்ச்சியர்; காட்டுக்கோழி, மான், முயல், 
பாடி; ஆறு, சுனை; கொன்றை, காயா குருந்து, முல்லை; சாமை
வரகு விதைத்தல்; 
ஏற்றுப்பறை, முல்லையாழ் சாதாரி.
(36) 
மருதத்திற்குரிய
கருப்பொருள்கள் 
805. இந்திர னூர
னெழின்மிகு கிழவன் 
     மனைவி கிழத்தி யுழவ
ருழத்தியர் 
			
				
				 |