பொருளதிகாரம்225முத்துவீரியம்

    கடையர் கடைச்சியர் கம்புள்வெண் குருகு
    எருமை நீர்நா யெழிற்பெரு மூதூர்
    ஆறு மனைக்கிண றிலஞ்சி தாமரை
    மன்றன் முழவ மருதயாழ் மருதஞ்
    செந்நெல் வெண்ணெ றிருவிழா வயர்தல்
    மருதக் கருப்பொரு ளாம்வழுத் திடினே.

என்பது, மருதத்திணைக் கருப்பொருள், இந்திரன் ஊரன் கிழவன் மனைவி கிழத்தி
உழவர் உழத்தியர் பறவை கொக்கு எருமை நீர்நாய் பேரூர் மூதூர் ஆறு மனைக்கிணறு
மகிழ்தாமரை மணப்பறை மருதயாழ் மருதவிசைப்பாட்டு செந்நெல் வெண்ணெல்
திருவிழவயர்தல். (37)

நெய்தற்குரிய கருப்பொருள்கள்

806. திரைநீர் வருணன் சேர்ப்பன் புலம்பன்
     பரத்தி நுளைச்சி பரதர் பரத்தியர்
     நுளையர் நுளைச்சிய ரளவ ரளத்தியர்
     பாக்கம் பட்டினம் வாயசஞ் சுறவம்
     உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
     கண்டகங் கைதை முண்டக மடம்பு
     மீனுப்புப் படுத்தல் விளரியாழ் செவ்வழி
     நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
     நெடுநீர் நெய்தற் கருப்பொரு ளாகும்.

நெய்தற்றிணைக் கருப்பொருள், வருணன் சேர்ப்பன் புலம்பன் பரத்தி நுளைச்சி பரதர்
பரத்தியர் நுளையர் நுளைச்சியர் அளவர் அளத்தியர் பாக்கம் பட்டினம் காக்கை சுறவு
உவர்நீர்க்கேணி நெய்தல் தாழை முட்செடி அடம்பு மீன் உப்புப்படுத்தல் விளரியாழ்
செவ்வழியிசை கோட்பறை பம்பை. (38)

திணைமயக்கம்

807. திணைமயக் குறுதலுங் கடிநிலை யின்றே.

என்பது, குறிஞ்சிமுதலிய ஐந்திணைகளும் ஒன்றொடொன்று மயங்கினும் நீக்கலிலவாம்.
(39)