| பொருளதிகாரம் | 235 | முத்துவீரியம் |  
  
தூதோ அனங்கன் றுணையோ விணையிலி
      தொல்லைத்தில்லை 
      மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே. (திருக். 2) 
      (கு-ரை.) பணிகளது பதி - நாகருலகம். 
      தெளிதல் 
      என்பது, ஐயுற்றபின் அவயவமியங்க நோக்கித்
      தெய்வமல்ல ளெனத் தெளிதல், 
      (வ-று.) 
      பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக்
      கண்ணிமைக்கும் 
      தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி 
      ஆயும் மனனே யணங்கல்லள் அம்மா
      முலைசுமந்து 
      தேயும் மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே.
      (திருக். 3) 
      நயப்பு 
      என்பது, தெய்வ மல்லளெனத் தெளிந்தபின்றை
      மக்களுள்ளா ளென்று நயந்துசென்று 
      எய்த நினையாநிற்றல். 
      (வ-று.) 
      அகல்கின்ற வல்குற் றடமது கொங்கை
      யவையவநீ 
      புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே யிடையடை யார்புரங்கள் 
      இகல்குன்ற வில்லிற்செற்
      றோன்றில்லை யீசனெம் மானெதிர்ந்த 
      பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ னம்மன்ன பல்வளைக்கே.
      (திருக். 4) 
      (கு-ரை.) எதிர்ந்த பகல்-மாறுபட்ட
      கதிரவன். 
      உட்கோள் 
      என்பது, மக்களுள்ளா ளென்று நயந்துசென்றெய்த
      நினையா நின்றவன், தன்னிடத்து 
      அவளுக்குண்டாகிய
      காதல் அவள் கண்ணிற் கண்டு தன்னுட்கொள்ளாநிற்றல். 
      (வ-று.) 
      அணியும் அமிழ்துமென் ஆவியும் ஆயவன்
      தில்லைச்சிந்தா 
      மணியும்ப ராரறி யாமறை யோனடி
      வாழ்த்தலரின் 
			
				
				 |