எழுத்ததிகாரம்24முத்துவீரியம்

(இ-ள்.) ல, ள முன்னர்க் க, ச, ப, வ, ய க்கள் வந்து மயங்கும்.

(வ-று.) வேல், வாள், கடிது, சிறிது, பெரிது, வலிது, யாது, வேல்கடிது, வாள்கடிது, சிறிது, பெரிது எனப் புணர்த்தி நோக்கு. (74)

இதுவுமது

75. வகாரை முன்னர் யகாரை மயங்கும்.

(இ-ள்.) வகரத்துக்கு முன்னர் யகரம் வந்து மயங்கும்.

(வ-று.) தெவ்யாது எனவரும். (75)

இதுவுமது

76. க, ச, ப, றகாரைமுற் கலக்கு மென்ப.

(இ-ள்) றகரத்துக்கு முன்னர்க் க, ச, ப க்கள் வந்து மயங்கும்.

(வ-று) கற்க, பொற்சிலை, கற்பு. (76)

குற்றொற்றாகாதன

77. ரகார ழகாரங் குற்றொற் றொற்றா.

(இ-ள்.) ர, ழ க்கள் குற்றெழுத்தைச் சாராவாம்.

(வ-று.) வேர்பெரிது, வீழ்சிறிது, வேய்செய்.

(வி-ரை.) தொல்காப்பியத்தில் இந்நூற்பா ‘அவற்றுள்’ என்ற தனிச்சொல்லுடன்
கூட்டிச் சொல்லப்பட்டுள்ளது. ஆகா என முடிந்துள்ளது. (எழுத்து - மொழி - 16) (77)

உடனிலை மெய்ம்மயக்கம்

78. ர, ழ, வல்லன வுடனிலை யென மொழிப.

(இ-ள்.) ர, ழ க்களல்லாதனவாகிய பதினாறு மெய்யுந் தம்மொடு தாங்கூடுங்
கூட்டமுடனிலை மெய்மயக்காகும்.

(வ-று.) அக்கம், அச்சம், அங்ஙனம், அஞ்ஞானம், அட்டை, அண்ணல், அத்தம்,
அந்நூல், அப்பம், அம்மை, அய்யம், அல்லி, அவ்வை, அள்ளல், அற்றம், அன்னை. (78)

உயிர்மெய் மயக்கத்திற்கு அளவில்லை

79. உயிர்மெய் மயக்கிற் கோரள வின்றே.