பொருளதிகாரம்241முத்துவீரியம்

அருமையறிதல்

என்பது, ஆடிடத்துய்த்து அகன்றவன், ஆயவெள்ளத்தையும் அவ்விடத்தையும்
நோக்கி, இவளையா னெய்தினேன் என்பது இன்னதென்றறியேன், இனியிவள்
நமக்கெய்தற் கரியவளென, அவளருமை யறிந்து வருந்தல்.

(வ-று.)

புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின்
துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்றில்லைச் சூழ்பொழில்வாய்
இணர்ப்போ தணிகுழ லேழைதன் நீர்மையிந் நீர்மையென்றாற்
புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. (திருக். 17)

பாங்கியையறிதல்

என்பது, அருமையறிந்து வருந்திய தலைமகன், ஆயத்தோடு செல்லும்
தலைமகளைநோக்க, அந்நிலைமைக்கண் அவளுமிப்புணர்ச்சி இவளுக்கு 
வெளிப்படுமோவென வுட்கொண்டு, எல்லாரையும் போலன்றித் தன் காதற்றோழியைப்
பலகாற் கடைக்கண்ணானோக்க நோக்கி, இவள்போலும் இவட்குச் சிறந்தாள்;
இதுவுமெனக்கோர் சார்பாமென வுட்கொண்டு, அவள் காதற்றோழியை யறியாநிற்றல்.

(வ-று.)

உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னொடென்னப்
பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச்
செயிரொன்று முப்புரஞ் செற்றவன் றில்லைச்சிற் றம்பலத்துப்
பயில்கின்ற கூத்த னருளென லாகும் பணிமொழிக்கே. (திருக் - 18)

(கு-ரை.) ஒன்றே சிறப்பு - தாய் தந்தையர்களால் செய்யப்படும் சிறப்புக்களும்
இவட்கும் எனக்கும் ஒன்றாகும். (8)

இயற்கைப்புணர்ச்சி முற்றும்.

 

9. பாங்கற்கூட்டம்

புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தெருண்டு வரைதலைத் தெருளானாயின், தன்
பாங்கனானாதல், இடந்தலைப் பாட்டானாதல், இரண்டனுளொன்றாற் சென்றெய்தன் முறை.