பொருளதிகாரம்243முத்துவீரியம்

காதற்றோழியை நயந்து, இவளவட்குச் சிறந்த துணையன்றே, அத்துணை எனக்குச்
சிறந்தாளல்லள், எனக்குச் சிறந்தானைக் கண்டு கூறின், பின்னிவளைச் சென்றெய்தக்
குறையில்லையெனத் தன் காதற்பாங்கனை நினைதல்.

(வ-று.)

பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள்
ஆங்கெனை யாண்டுகொண் டாடும்பி ரானடித் தாமரைக்கே
பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால்
ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே. (திருக். 19)

(கு-ரை.) பூகனை ஆர் புனல் - பூக்களையுடைய ஒலிபொருந்திய நீர்,
புரிந்து-விரும்பி. யான் அன்ன பண்பு - என்னை ஒக்கும் பண்பு.

பாங்கன் வினாதல்

என்பது, தன்னை நினைந்து வாராநின்ற தலைமகனைத் தானெதிர்ப்பட்டு,
அடிமுடிகாறுநோக்கி, நின்னுடைய தோள்கள் மெலிந்து நீ இவ்வாறாதற்குக்
காரணமென்னோவென்று பாங்கன் முற்பட்டு வினாவல்.

(வ-று.)

சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப லத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே. (திருக். 20)

(கு-ரை.) தீந்தமிழின் துறை - அகப்புறத் துறைகள், ஏழிசை - குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. சூழல் - அவற்றான் இயன்ற பண்ணும்
பாடலும் முதலாயின.

உற்றதுரைத்தல்

என்பது, எதிர்ப்பட்டு வினாவிய பாங்கனுக்கு, நெருநல் கைலைப்பொழிற்கட்
சென்றேன், அவ்விடத்தொரு சிற்றிடைச் சிறுமான விழிக்குறத்தியால் இவ்வாறாயினேனெனத்
தனக்குற்றது கூறல்.

(வ-று.)

கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே