| பொருளதிகாரம் | 244 | முத்துவீரியம் |  
  
தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில்
      லைச்சிவன்றாள் 
      ஆம்பொற் றடமலர் சூடுமென் ஆற்றல் அகற்றியதே.
      (திருக். 21) 
      (கு-ரை.) கோம்பி - ஓந்தி, மயில்
      இயல்பிலேயே மென்மை யானது. அதுவும் 
      ஒந்திக்குப்
      பயந்து மேயாத மயில் எனவே இன்னும் அதனது மென்மை
      தெரியவந்தது. பாம்பு 
      என்றால் படையும் நடுங்கும்
      ஆதலின் பாம்பே வன்மையானது. அதுவும் யானையையும் 
      ஊறு
      இழைத்தற்குரிய பாம்பு எனவே அதனது வன்மை தெரியவந்தது.
      எத்துணை 
      மென்மையுடையது எத்துணை வன்மையுடையதை
      ஆற்றலற்றதாகி அழியச் செய்தது எனக் 
      கூறிய முகத்தான்
      தலைவியது மென்மையையும், தன்னுடைய வன்மையையும்
      குறித்துச் 
      செல்லும் பாங்கு தெரியவருகிறது. ‘ஒண்ணுதற்கு
      ஓஒ உடைந்ததே’ (குறள்- 1088) என்பதும் 
      இப்பொருட்டு. 
      கழறியுரைத்தல் 
      என்பது, உற்றதுரைப்பக்
      கேட்டபாங்கன், இவன் தலைமைப் பாட்டிற்குப்
      போதாதென 
      வுட்கொண்டு, நீயொரு சிறுமான் விழிக்கு
      யானிவ்வாறாயினேனென்றல் நின் கற்பனைக்குப் 
      போதாதெனக் கழறியுரைத்தல். 
      (வ-று.) 
      உளமாம் வகைநம்மை
      யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக் 
      களமாம் விடமமிர் தாக்கிய தில்லைத்தொல்
      லோன்கயிலை 
      வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ்
      சிம்மருங்குல் 
      இளமான் விழித்ததென் றோவின்றெம் மண்ணல்
      இரங்கியதே. (திருக். 22) 
      கழற்றெதிர்மறுத்தல் 
      என்பது, காதற்பாங்கன் கழறவுங்
      கேளானாய்ப் பின்னும் வேட்கைவயத்தனாய் நின்று, 
      என்னாற், காணப்பட்டவடிவை நீ கண்டிலை கண்டனையாயிற்
      கழறாயென்று, அவனோடு 
      மறுத்துரைத்து வருந்தல். 
      (வ-று.) 
      சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்
      தில்லைச்சிற் றம்பலத்து 
      மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும் 
      பூணிற் பொலிகொங்கை ஆவியை ஓவியப்
      பொற்கொழுந்தைக் 
      காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே.
      (திருக். 23) 
			
				
				 |