பொருளதிகாரம் | 245 | முத்துவீரியம் |
கவன்றுரைத்தல்
என்பது, மறுத்துரைத்து வருந்தாநிற்பக்
கண்ட பாங்கன், ஒருகாலத்துங் கலங்காத
உள்ளமிவ்வாறு
கலங்குதற்குக் காரணமென்னோவெனத் தலைவனொடு
கூறல்.
(வ-று.)
விலங்கலைக் கால்விண்டு மேன்மே
லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க்
கலங்கலைச் சென்றவன் றுங்கலங்
காய்கமழ் கொன்றைதுன்றும்
அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத்
தானரு ளில்லவர்போல்
துலங்கலைச் சென்றிதென் னோவள்ள
லுள்ளந் துயர்கின்றதே. (திருக்.24)
(கு-ரை.) விலங்கல் - மலை.
கால்விண்டு - காற்றுப்பிரிந்து.
வலியழிவுரைத்தல்
என்பது, பாங்கன் கவன்றுரையாநிற்ப,
முன்பு இத்தன்மையே னாகிய யானின்றொரு
சிறுமான்விழிக்கு இவ்வாறாயினேனெனத்,
தலைமகன்றன் வலியழிந்தமை கூறிவருந்தல்.
(வ-று.)
தலைப்படு சால்பினுக்
குந்தள ரேன்சித்தம் பித்தனென்று
மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவன் எத்துணையும்
கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற்
றம்பல வன்கயிலை
மலைச்சிறு மான்விழி யாலழி வுற்று மயங்கினனே.
(திருக். 25)
(கு-ரை.) சித்தம் பித்தன் என்று
மலைத்தறிவாரில்லை - பிறழவுணர்ந்தாய் என்று
மாறுபட்டு என்னைக் குறைகூறற்கும் இல்லை.
விதியொடுவெறுத்தல்
என்பது, வலியழிந்தமை
கூறிவருந்திய தலைமகன், பாங்கனொடு புலந்துவெள்கி,
யான்செய்த நல்வினையும் வந்து பயன்றந்ததில்லையென
விதியொடு வெறுத்துக் கூறல்.
(வ-று.)
நல்வினை யுந்நயம்
தந்தின்று வந்து நடுங்குமின்மேல்
கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன்சொல்ல
வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை
தொழாரின் வெள்கித்
தொல்வினை யாற்றுய ரும்மென தாருயிர்
துப்புறவே. (திருக். 26)
|