சொல்லதிகாரம் | 129 | முத்துவீரியம் |
(வ-று.) பொன் - பறி, ஆடை -
காரை = குழூஉக்குறி; ஓலை - திருமுகம் -
மங்கலம்;
ஈகாரபகரம், ஆமுன்பகரவீ = இடக்கரடக்கல்.
(வி-ரை.) இடக்கர்
தோன்றாது அதனை மறைத்ததை இடக்கரடக்கல் என்றும்,
இடக்கர்போற் கூறத்தகாததன்றேனும்
மங்கலமில்லதை யொழித்து மங்கலமாகக் கூறுவதை
மங்கலமென்றும், ஒவ்வொரு குழுவினுள்ளோர் யாதானும்
ஒரு காரணத்தான் ஒரு
பொருளினது
சொற்குறியை யொழித்து வேறொரு சொற்குறியாற் கூறுவதைக் குழூஉக்
குறியென்றும்
கூறுவர். (நன் - 267 -
சங்கரநமச்சிவாயர் உரை) (17)
செய்யுள் இன்னதென்பது
475. கற்றுணர் வல்லோர்
கற்பித் துரைப்பது
செய்யு ளென்மனார்
தெளிந்திசி னோரே.
(இ-ள்.) பலநூல்களையும் ஓதி
அவற்றின் பொருள் நன்குணர்ந்த பெரியோர்
கற்பித்துப்
பாடுவது செய்யுளாம்.
(வ-று.) ‘இருநோக்
கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன்
றந்நோய் மருந்து’’ (திருக்குறள்-காமம்) (18)
குறிப்பிற் றருமொழிகள்
476. தொகையொன்
றொழிபொதுச் சொல்லே முதனிலை
தகுதி வினைக்குறிப் பன்மொழி யாகு
பெயரே குறிப்புரை யல்லன
வெளிப்படை.
(இ-ள்.) தொகைக்
குறிப்புச்சொல்லும், இருதிணை ஆண் பெணு ளொன்றனை
யொழிக்கும் பொதுச்சொல்லும், முதற்குறிப்புச்
சொல்லும், மூவகைத்தகுதி
வழக்குச்சொற்களும்,
வினைக்குறிப்புச் சொல்லும், அன்மொழித் தொகைச்சொல்லும்,
ஆகுபெயரும், குறிப்பினாலிருதிணை யைம்பாற் பொருள்களையும்
தருகிற சொற்களாம்.
இவையல்லன வெல்லாம்
வெளிப்படையாக அப்பொருளைத் தருகிற சொற்களாம்.
(வ-று.) அலங்குளைப்புரவி
யைவரொடு சினைஇ(புறம்-2) தொகைக் குறிப்பு;
ஆயிரமக்கள் பொருதார் - ஒன்றொழி பொதுச்சொல்;
அறத்தாறிதுவென (திருக்குறள்
- அறம்
- 37)
முதற்குறிப்பு; ஈகார பகரம் - தகுதி; பொன்னன் -
வினைக்குறிப்பு;
பொற்றொடி -
அன்மொழித்தொகை;
உலகு-ஆகுபெயர். (19)
|