பொருளதிகாரம் | 248 | முத்துவீரியம் |
சொன்னவிடமும் இதுவே, இயலும் இவையே,
இவளுமவளே என்று ஐயமறத்
தெளியக் காணா
நிற்றல்.
(வ-று.)
வடிக்கண் இவைவஞ்சி
யஞ்சு மிடையிது வாய்பவளம்
துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் தொடர்ந்துவீடா
அடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போல்
படிச்சந் தமுமிது வேயிவ ளேயப்
பணிமொழியே.(திருக். 32)
(கு-ரை.) அம்பலம்போல் படிச்
சந்தமும் இதுவே - (தில்லைப் பிரானின்) அம்பலம்
போன்ற ஒப்புமையுடைய இடமும் இதுவே. வெற்பன்
சொற் பரிசே - தலைவன் கூறிய
வண்ணம் இருந்தது.
தலைவனை வியந்துரைத்தல்
என்பது, குறிவழிக்கண்ட பாங்கன்,
இவ்வுறுப்புகளையுடைய இவளைக் கண்டுபிரிந்து
இங்குநின்று
அங்குவந்து, யான்கழறவும் ஆற்றி, அத்தனையுந் தப்பாமல்
சொன்ன
அண்ணலே
திண்ணியான் எனத், தலைமகனை
வியந்துகூறல்.
(வ-று.)
குவளைக் களத்தம் பலவன் குரைகழல்
போற்கமலத்
தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின்
இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த
கவளக் களிற்றண்ண லேதிண்ணி
யானிக் கடலிடத்தே. (திருக். 33)
(கு-ரை.) குவளைக் களத்து அம்பலவன்
- நீலமலர் போன்ற மிடற்றையுடைய
அம்பலவன்.
குரைகழல் போல் கமலத் தவளை - ஒலிக்கும்
கழலையுடைய திருவடிபோலும்
தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
திருமகளனைய தலைவியை.
கண்டமைகூறல்
என்பது, தலைமகனை வியந்துரைத்த
பாங்கன், விரைந்து சென்று, தானவளைக்
கண்டமை
தலைமகனுக்குப் பிடிமிசை வைத்துக் கூறாநிற்றல்.
(வ-று.)
பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம்
பொற்கயிலைப்
புணர்ந்தாங் ககன்ற பொருகரி
யுன்னிப் புனத்தயலே
|