எழுத்ததிகாரம் | 25 | முத்துவீரியம் |
(இ-ள்.) உயிர்மெய்
மயங்கும் மயக்கத்திற்கு வரையறை யில்லையாம். (79)
செய்யுட்கண்வரும்
ஈரொற்றுக்கள்
80. 1ல, ள, மெய்திரிந்த ன,
ண, முன் மகாரம்
நைந்தீ ரொற்றாஞ்
செய்யு ளுள்ளே.
(இ-ள்.) ல, ள க்கள்
திரிந்த ன ண க்களுக்கு முன்னின்ற மகரந் தன்மாத்திரையிற்
குறுகி இரண்டொற்றாக மயங்கும்.
(வ-று.) போன்ம், மருண்ம்.
(80)
முதல் இடை கடைகளில்
வரும் எழுத்துக்கள்
தம் பெயர் மொழியின்
மயங்கும்
81. 2தம்பெயர் மொழியின்
முதலு மயக்கமும்
இம்முறை மாறியு மியலு
மென்ப.
(இ-ள்.) தம்பெய
ருரைக்குங்கால் மொழிக்கு முதலிலு மிடையிலுமிம் முறையை
மாறியு நடக்கும்.
(வ-று.) ‘ல, ள
மெய்திரிந்த.’ (80) (81)
மொழிக்கு ஈறாகும்
உயிரெழுத்துக்கள்
82. ஈராறா றுயிரு மிறுதியா
மெனவே.
(இ-ள்.) பன்னிரண்டுயிரும்
மொழிக்கீறாகும்.
(வ-று.) விள, பவா, கிளி,
குரீ, கடு, மரூ, சே, தை, நொ, கோ, வௌ. (82)
குறில் அளபெடைக்கண்
ஈறாகும்
83. அளபிற் குற்றுயி ரந்த
மாகும்.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
குற்றுயிரைந்தும் அளபெடுப்புழி ஈறாகும்.
(வ-று.) ஆ அ, ஈ இ, ஊ உ, ஏ எ, ஓ
ஒ. (83)
1. நன் - எழுத்து 65.
2. ,, ,, 66.
|