பொருளதிகாரம் | 255 | முத்துவீரியம் |
(வ-று.)
என்னறி வால்வந்த தன்றிது முன்னுமின்
னும்முயன்றான்
மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம் வருந்தல்நெஞ்சே
மின்னெறி செஞ்சடைக் கூத்தப்
பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று
மின்றோய் பொழிலிடத்தே.
(திருக்.49) (10)
இடந்தலைப்பாடு முற்றும்.
11. மதியுடம்படுத்தல்
இரண்டனுள் ஒன்றாற் சென்றெய்திய
பின்னர்த் தெருண்டு வரை தலை,
தெருளானாயின், அவள் கண்ணாற் காட்டப்பட்ட
காதற்றோழியை வழிபட்டுச்
சென்றெய்துதன்
முறைமையென்ப. வழிபடுமாறு
- தெற்றெனத் தன்குறை கூறாதிரந்து
வைத்துக்,
கரந்த
மொழியாற் றன் கருத்தறிவித்து, அவளை
ஐயவுணர்வினளாக்கி,
அதுவழியாக நின்று தன்
குறைகூறல்.
அதன் வகை
839. சேறல் துணிதலுஞ் சிந்துரம்
வினாதலும்
பெருமான் வழிபதி பெயர்பிற
வினாதலும்
மொழிபெறா தியம்பலுங் கருத்தறி
வித்தலும்
இடைவி னாதலு மிவையிரு நான்கிரண்டு
மடவரல் தோழிக்கு மதியுடம்
படுத்தல்.
(திருக்கோவையார் உரை)
என்பது, பாங்கியிடைச்சேறல்,
குறையுறத் துணிதல், வேழம் வினாதல், கலைமான்
வினாதல், வழிவினாதல், பதிவினாதல், பெயர்
வினாதல்,
மொழி பெறாதியம்பல்,
கருத்தறிவித்தல், இடைவினாதல் ஆகிய பத்தும்
மதியுடம்படுத்தல்.
பாங்கியிடைச் சேறல்
என்பது, இரண்டனுள் ஒன்றாற்
சென்றெய்திப் புணர்ந்து நீங்கிய தலைமகன்,
இனியிவளைச் சென்றெய்துதலன்றி, யாமவள் கண்ணாற்
காட்டப்பட்ட காதற்றோழிக்கு
நங்குறையுள்ளது சொல்வேமென்று அவளை நோக்கிச்
செல்லல்.
|