பொருளதிகாரம்265முத்துவீரியம்

மைந்நிற வார்குழன் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர்
இந்நிற மும்பெறின் யானுங் குடைவன் இருஞ்சுனையே. (திருக். 69)

புணர்ச்சியுரைத்தல்

என்பது, சுனையாடல் கூறி நகையாடிய தோழி அதுகிடக்க, நீயாடிய அப்பெரிய
சுனைதான், கண் சிவப்ப, வாய்விளர்ப்ப, அளிதொடரும் வரைமலரைச் சூட்டவற்றோ;
சொல்வாயாக வெனப், புணர்ச்சியுரையா நிற்றல்.

(வ-று.)

பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத்
தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்றட மால்வரைவாய்க்
கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக்கண் ணாரளிபின்
வருங்கண் மலைமலர் சூட்டவற் றோமற்றவ் வான்சுனையே. (திருக். 70)

(கு-ரை.) வேழப் படையோன் - கரும்பாகிய சிலையை யுடைய மன்மதன். பட -
அழியுமாறு.

மதியுடம்படுதல்

என்பது, பலபடியும் நாணநாடிக் கூட்டமுண்மை யுணர்ந்த தோழி இம்மலையிடத்து,
இருவர்க்கும் இன்பதுன்பங்கள் பொதுவாய் வாராநின்றன, அதனால் இவ்விருவர்க்கு
முயிரொன்றே யென வியந்து கூறல்.

(வ-று.)

காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம்
ஏகத் தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில்
தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வருமின்பத் துன்பங்களே. (திருக். 71) (15)

நாணநாட்டம் முற்றும்.

 

16. நடுங்கநாட்டம்

என்பது, கூட்டமுண்மை யுணர்ந்தனளாயினும், தலைமகள் பெருநாணினளாகலானும்,
தான் சொல்லாடாது அவள் தன்னைக்