| பொருளதிகாரம் | 271 | முத்துவீரியம் |  
  
மென வுட்கொண்டு, நம்புனத்தின்கட்
      சேயினது வடிவையுடையராய்ச் சினவேலேந்தி,
      ஒருவர் 
      பலகாலும் வாராநின்றார். வந்து நின்று
      ஒன்றுரைப்பதுஞ் செய்யார், அவரிடத்து யாஞ் 
      செய்யத் தக்கது யாதெனத், தானறியாதாள் போலத்,
      தலைமகளோடுசாவி, அவள் 
      நினைவறியா நிற்றல். 
      (வ-று.) 
      தாதேய் மலர்க்குஞ்சி
      யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித் 
      தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர் 
      மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார் 
      யாதே செயத்தக் கதுமது வார்குழல் ஏந்திழையே. (திருக். 82) 
      மென்மொழியாற் கூறல் 
      என்பது, நினைவறிந்து முகங்கொண்டு,
      அது வழியாக நின்று, ஒரு பெரியோன் வாடிய 
      மேனியனும் வாடாத தழையனுமாய், நம் புனத்தை விட்டுப்
      போவதுஞ் செய்கின்றிலன், தன் 
      குறையின்னதென்று வெளிப்படச் சொல்வதுஞ் செய்கின்றிலன்,
      இஃதென்ன மாயமோ 
      வறிகின்றிலேனெனத், தோழி
      தானதற்கு நொந்து கூறல். 
      (வ-று.) 
      வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்
      மிக்கென்ன மாயங்கொலோ 
      எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப் 
      புரிசேர் சடையோன் புதல்வன்கொல்
      பூங்கணை வேள்கொலென்னத் 
      தெரியேம் உரையான் பிரியா
      னொருவனித் தேம்புனமே. (திருக். 83) 
      விரவிக்கூறல் 
      என்பது, வன்மொழியாற் கூறின்
      மனமெலியுமென்றஞ்சி, ஓரலவன் தன் பெடைக்கு 
      நாவற்கனியை
      நல்கக்கண்டு, ஒருபெருந்தகை, பேய்கண்டாற்போல
      நின்றான், 
      அந்நிலைமையை
      நீ கண்டாயாயின்; உயிர்வாழமாட்டாய்;
      யான் வன்கண்மையே 
      னாதலினாற்றியுளேனாய்ப்
      போந்தேனென, மென்மொழியோடு சிறிது வன்மொழிபடக் 
      கூறாநிற்றல். 
      (வ-று.) 
      நீகண்ட னையெனின் வாழலை நேரிழை
      யம்பலத்தான் 
      சேய்கண் டனையன்சென் றாங்கோ
      ரலவன்றன் சீர்ப்பெடையின் 
			
				
				 |