எழுத்ததிகாரம் | 28 | முத்துவீரியம் |
குற்றியலுகரமும்
மொழிக்கு ஈறாகும்
92. எஞ்சிய வுகரமு மிறுதி
யாகும்.
(இ-ள்.) குற்றியலுகரமு
மீறாகும்.
(வ-று.) நாகு. (92)
உயிர்மெய் நிற்கும் முறை
93. ஒற்றுமுன் னுயிர்பின்
னுறுமுயிர் மெய்யே.
(இ-ள்.) உயிர்மெய்,
ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாக வரும்.
(வி-ரை.)
‘‘மெய்யின் வழியது
உயிர்தோன்று நிலையே’’ (நூன் - 98)
எனத் தொல்காப்பியரும்,
‘‘ஒற்று முன்னாய் வரும்
உயிர்மெய்’’ (எழுத் - 34)
என நன்னூலாரும் கூறுதல்
காண்க. (93)
உயிர்,
மெய்யோடியையினும் தந்நிலை திரியாது
94. மெய்யொடு மேவினும்
வேறு படாவுயிர்
(இ-ள்.) உயிர் மெய்களோடு
கூடினும் வேறுபடாவாம்.
(வ-று.) கோ, பூ, தீ, பா, கௌ.
(வி-ரை.)
மெய்யெழுத்துக்கள் தாம் கூடிய உயிரின் மாத்திரையே
தமக்குரிய
மாத்திரையாகக் கொள்ளும் என்பது இதன் கருத்தாகும்.
‘‘மெய்யோ டியையினும்
உயிரியல் திரியா’’ (நூன் - 10)
என்பது தொல்காப்பியம்.
(94)
மெய்கள் அகரத்தோடு
கூடிவரும்
95. மெய்யி னியக்க
மகரமொடு சிவணும்
(இ-ள்.) மெய் பதினெட்டும்
அகரவுயிரோடியலும்.
(வ-று.) க, ங, ச, ஞ, ட, ண, த, ந,
ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன. (95)
|