| பொருளதிகாரம் | 280 | முத்துவீரியம் |  
  
(வ-று.) 
      மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல
      வன்கழற்கே 
      மெய்த்தழை யாநின்ற அன்பினர்
      போல விதிர்விதிர்த்துக் 
      கைத்தழை யேந்திக் கடமா வினாய்க்கையில் வில்லின்றியே 
      பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே.
      (திருக். 102) 
      சிறப்பின்மைகூறி மறுத்தல் 
      என்பது, என் வருத்தத்திற்குக்
      கவலாநின்றன ளிவளாதலின், எனக்கிது  
 முடியாமை யில்லையென உட்கொண்டு நிற்பத், தோழி
      இக்குன்றிடத்து மாவுஞ்சுனையு 
      மிவள்வடிவுக்கஞ்சி மலர்ந்தறியா வாதலான், ஈண்டில்லாதனவற்றை
      யாம் அணியிற் கண்டார் 
      ஐயுறுவரென மறுத்துக்
      கூறல். 
      (வ-று.) 
      அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற்
      றம்பலமே 
      ஒக்கும் மிவள தொளிருரு அஞ்சிமஞ் சார்சிலம்பா 
      கொக்கும் சுனையும் குளிர்தளி
      ருங்கொழும் போதுகளும் 
      இக்குன்றில் என்றும் மலர்ந்தறி
      யாத இயல்பினவே. (திருக். 103) 
      இளமைகூறி மறுத்தல் 
      என்பது, இவள்வடிவிற்கஞ்சி
      மலர்ந்தறியா வென்றதல்லது, மறுத்துக்கூறியவாறன்று, 
      சிறப்பின்மை கூறியவாறென உட்கொண்டு சிறப்புடைத்
      தழைகொண்டுசெல்ல, அதுகண்டு, 
      குழலு முலையுங் குவியாத குதலைச்
      சொல்லிக்கு நீ கூறிய காரியஞ் சிறிது 
      மியைபுடைத்தன்றென அவளிளமை கூறி மறுத்துரைத்தல். 
      (வ-று.) 
      உருகு தலைச்சென்ற
      வுள்ளத்தும் அம்பலத்
      தும்மொளியே 
      பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார் 
      முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா 
      ஒருகு தலைச்சின் மழலைக்கென் னோவைய ஓதுவதே. (திருக். 104) 
      மறைத்தமைகூறி நகைத்துரைத்தல் 
      என்பது, இவளிளமை கூறுகின்றது
      தழைவாங்குதற் பொருட்டன்றாக வேண்டும், 
      அதுவன்றி, இந்நாளெல்லாமியைய 
			
				
				 |