| பொருளதிகாரம் | 283 | முத்துவீரியம் |  
  
(கு-ரை.) கோலாப் பிரசம் - ஈ முதலானவற்றைக்
      கொன்று எடுக்கப் படாத தேன். 
      குறிப்பறிதல் 
      என்பது, தலைமகன்மாட்டுத் தழையெதிர்ந்த
      தோழி, இவளுக்குத் தெற்றெனக் 
      கூறுவேனாயின் இவள்
      மறுக்கவுங் கூடுமென உட்கொண்டு, இந்நாள்காறுந் 
      தழையேலாமைக்குத் தக்கபொய்சொல்லி மறுத்தேன்,
      இன்றவனோக்கங் கண்டபின் 
      பொய்சொல்லும் நெறியறிந்திலேன், இனியவனுக்குக்
      கூறுமா றென்னோவெனத் தழையேற் 
      பித்தற்குத் தலைமகள் குறிப்பறிதல். 
      (வ-று) 
      கழைகாண் டலுஞ்சுளி யுங்களி யானையன்
      னான்கரத்தில் 
      தழைகாண் டலும்பொய் தழைப்பமுன்
      காண்பனின் றம்பலத்தான் 
      உழைகாண் டலுநினைப் பாகுமென்
      னோக்கிமன் னோக்கங்கண்டால் 
      இழைகாண் பணைமுலை யாயறி யேன்சொல்லும் ஈடவற்கே.
      
      (திருக். 111) 
      குறிப்பறிந்து கூறல் 
      என்பது, குறிப்பறிந்து
      முகங்கண்டு, அது வழியாகநின்று, யானைகடிந்த
      பேருதவியார் 
      கையிற்றழையும் துவளத்தகுமோ, அது
      துவளாமல், யாம் அவர் குறைமுடிக்க வேண்டாவோ 
      வெனத் தோழி நயப்பக்கூறா நிற்றல். 
      (வ-று.) 
      தவளத்த நீறணி யுந்தடந்
      தோளண்ணல் தன்னொருபால் 
      அவளத்த னாமக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன 
      கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையும் 
      துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. (திருக். 112) 
      (கு-ரை.) தன் கூற்றில் இருக்கும்
      உமைக்குத் தந்தையாயும், மகனாயும் இறைவன் 
      விளங்குபவன் என்றது சில தத்துவத்தினின்றும்
      சத்தி தத்துவம் தோன்றுதலையும், சத்தி 
      தத்துவத்தினின்றும்
      சதாசிவ தத்துவம் தோன்றுதலையும் உட்கொண்டதாகும். 
      வகுத்துரைத்தல் 
      என்பது, உதவி கூறவும் பெருநாணினளாதலின்,
      தழை வாங்கமாட்டாது நிற்ப, 
      அக்குறிப்பறிந்து,
      இருவகையானும் 
			
				
				 |