| பொருளதிகாரம் | 285 | முத்துவீரியம் |  
  
20. பகற்குறி 
      பகற்குறியென்பது, தலைமகளைத்
      தழையேற்பித்த தோழி தலைமகனுடன் அவளைப் 
      பகற்குறிக்கண்
      தலைப்பெய்வியா நிற்றல். 
      அதன் வகை 
      847. குறியிடங் கூறலு மாடிடம்
      படர்தலும் 
           குறியிடைச் சேறலு மிடத்துய்த்து
      நீங்கலும் 
           உவந்து கூறலு மொளிர்மருங் கணைதலும் 
           அறிவறி வித்தலு மவனுண் மகிழ்தலும் 
           ஆயத் துய்த்தலுந் தோழிவந்து
      கூடலும் 
           ஆடிடம் புகுதலுந் தனிகண் டுரைத்தலும் 
           தடமென் முலையாள் பருவங் கூறி 
           வரவு விலக்கலும் வரைவுடம் படாது 
           மிகுத்து ரைத்தலு மெய்ம்மை யுரைத்தலும் 
           வருத்தங் கூறலும் தாயச்சங் கூறலும் 
           இறசெறி வுணர்த்தலுந் தமர்நினை
      வியம்பலும் 
           எதிர்கோள் கூறலு மேறுகோ ளியம்பலும் 
           ஏதிலார் தம்முரை கூறலு மவளொடு 
           கூறுவாள் போன்று தினைமுதிர்வு
      கூறலும் 
           பகல்வரல் விலக்கலும் பையு
      ளெய்தித் 
           தினையொடு வெறுத்தலுஞ் சிறைப்புற
      மாக 
           வேங்கையொடு வெறுத்தலும் வெற்பமர்
      நாடற்குக் 
           கழுமலுற் றிரங்கலுங் கடிப்புனங்
      கையறக் 
           கொய்தமை கூறலும் பிரிவருமை கூறலும் 
           மயிலொடு கூறலும் வறும்புனங் காண்டலும் 
           பயில்பதி நோக்கிப் பதிமிக
      வாடலும் 
           சொன்னநா லெட்டுந் தோன்று மியற்கை 
           மன்னிய பகற்குறி வகையா கும்மே. 
      என்பது, குறியிடங்
      கூறல், ஆடிடம் படர்தல், குறியிடத்துக் கொண்டு
      சேறல், 
      இடத்துய்த்து நீங்கல், உவந்துரைத்தல்,
      மருங்கணைதல், பாங்கி யறிவுகூறல், உண்மகிழ்ந் 
      துரைத்தல், ஆயத்துய்த்தல், தோழிவந்து கூடல்,
      ஆடிடம் புகுதல், தனி கண்டுரைத்தல், 
      பருவங்கூறி
      வரவு விலக்கல், வரைவுடம்படாது மிகுத்துக் கூறல்,
      உண்மைகூறி 
      வரைவுகடாதல், வருத்தங்கூறி 
			
				
				 |