பொருளதிகாரம் | 291 | முத்துவீரியம் |
(வ-று.)
தள்ளி மணிசந்த முந்தித் தறுகட்
கரிமருப்புத்
தெள்ளி நறவம் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா
வெள்ளி மலையன்ன மால்விடை
யோன்புலி யூர்விளங்கும்
வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. (திருக். 128)
வரைவுடம்படாது மிகுத்துக் கூறல்
என்பது, பருவங்கூறி வரைவுகடாய தோழிக்கு,
அமராவதியினும் இம்மாதர்க்கு
ஒப்பில்லையென
நான்முகன் பயந்த பிள்ளையை யான் வரையுந்துணை
எளியளாக, நீ
கூறுகின்றது என்னோவெனத், தலைமகன்
வரைவுடம்படாது தலைமகளை மிகுத்துக் கூறல்.
(வ-று.)
மாடஞ்செய் பொன்னக ருந்நிக
ரில்லையிம் மாதர்க்கென்னப்
பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற
பிள்ளையை உள்ளலரைக்
கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்
தில்லைநின் றோன்கயிலைக்
கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்
றோநின்று கூறுவதே. (திருக். 129)
(கு-ரை.) கீடம் - புழு.
உண்மை கூறி வரைவுகடாதல்
என்பது, வரைவுடம்படாது மிகுத்துக்
கூறிய தலைமகனுக்கு, எங்களுக்குத் தாயுந்
தந்தையுங்
கானவர், யாங்கள் புனங்காப்போஞ் சிலர், நீர்
வரைவு வேண்டாமையி
னெம்மைப்
புனைந்து கூறல் வேண்டுவதில்லையெனத், தோழி தங்களுண்மை
கூறி
வரைவுகடாதல்.
(வ-று.)
வேய்தந்த வெண்முத்தம்
சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச்
சேய்தந்த வானகம் மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே
ஆய்தந்த அன்புதந் தாட்கொண்ட அம்பல வன்மலையில்
தாய்தந்தை கானவ ரேனலெங் காவலித் தாழ்வரையே.
(திருக். 130)
வருத்தங்கூறி வரைவுகடாதல்
என்பது, உண்மை கூறி வரைவுகடாய தோழி,
வரையாமை நினைந்து அவள் வருந்தா
நின்றாள்,
வரைவென்று கருத நீயிர்
|