பொருளதிகாரம்293முத்துவீரியம்

செறிப்பாராக நினையா நின்றார், அயலவரு மகட்பேச நினைக்கின்றா ரெனத், தமர்
நினைவுரைத்து வரைவுகடாதல்.

(வ-று.)

சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர்
கற்றும் அறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண்
டெற்றுந் திரையின் னமிர்தை யினித்தமர் இற்செறிப்பார்
மற்றுஞ் சிலபல சீறூர் பகர்பெரு வார்த்தைகளே. (திருக். 134)

எதிர்கோள் கூறி வரைவுகடாதல்

என்பது, தமர் நினைவுரைத்து வரைவுகடாய தோழி, நீ வரைவொடு வரின்,
அன்னையும் ஐயன்மாரும் அயலவரும் நின்வரவெதிர் கொள்வார், இனிப் பல நினையாது,
பலருமறிய வரைவொடு வருவாயாகவென, எதிர்கோள் கூறி வரைவுகடாதல்.

(வ-று.)

வழியும் அதுவன்னை யென்னின் மகிழும்வந் தெந்தையுநின்
மொழியின் வழிநிற்கும் சுற்றமுன் னேவயம் அம்பலத்துக்
குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக்
கெழியும்ம வேபணைத் தோள்பல என்னோ கிளக்கின்றதே. (திருக். 135)

ஏறுகோள் கூறி வரைவுகடாதல்

என்பது, எதிர்கோள் கூறி வரைவுகடாய தோழி, எம்முடைய ஐயன்மார், அவளுடைய
முலையின் பெருமையும் இடையின் சிறுமையும் கண்டு, எம்மூர்க்கண், விடையின் மருப்பைத்
திருத்தி விட்டார். இனி யடுப்பன வறியேமென, ஏறுகோள் கூறி வரைவுகடாவா நிற்றல்.

(வ-று.)

படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமுநுண்
இடையார் மெலிவுங்கண் டண்டர்கள் ஈர்முல்லை வேலியெம்மூர்
விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் றென்புலியூர்
உடையார் சுடவி வருவது போலும் உருவினதே. (திருக். 136)

அயலுரையுரைத்து வரைவுகடாதல்

என்பது, ஏறுகோள் கூறி வரைவுகடாய தோழி, அயலவர் நாளைப் பொன் புனையப்
புகுதாநின்றார், இதற்குத் தீவினையேன்