| பொருளதிகாரம் | 298 | முத்துவீரியம் |  
  
(கு-ரை.) வான் உந்து மாமதி வேண்டி
      அழும் மழப் போலும் - வானின்கண் செலும் 
      பெரிய மதியை வேண்டி அழும் குழவியைப் போல. நெஞ்சம்
      தலைவியின் பதியை நோக்கி 
      விழைந்ததற்கு இஃது
      உவமை யாயிற்று. 
      பகற்குறி முற்றும். 
      21. இரவுக்குறி 
      என்பது, பகற்குறி புணர்ந்து விலக்கப்பட்ட
      தலைமகன் தெருண்டு வரைதலைத் 
      தெளியானாயின், பின்னையும், தோழியைத் தலைப்பட் டிரவுக்குறி
      வேண்டிச் சென்றெய்தல். 
      என்னை, ‘களவினுட் டவிர்ச்சி கிழவோற்
      கில்லை’ 
      என்றாராகலின், 
      அதன் வகை 
      848. இரவுக்குறி வேண்டலு மாற்றருமை
      கூறலும் 
           நின்றுநெஞ் சுடைதலு நிலைகண்டு நேர்தலும் 
           உட்கோள் வினாதலு முட்கொண்டு
      வினாதலும் 
           குறியிடங் கூறலுங் குறியேற் பித்தலும் 
           இரவர வுரைத்தலு மேதங் கூறலும் 
           குறைதனை நேர்தலுங் குறைநயப்
      புரைத்தலும் 
           மயின்மே லிசைத்து வரவுணர்ந்
      துரைத்தலும் 
           தாய்துயி லறிதலுந் தலைவிதுயி லெடுத்தலும் 
           இடத்துய்த்து நீங்கலும் தளர்வகன்
      றுரைத்தலும் 
           மருங்கணை தலோடு முகங்கண்டு மகிழ்தலும் 
           பள்ளியிடத் துய்த்தலும்
      பள்ளியிடத் துய்த்து 
           வரைவு கடாவி வரவு விலக்கலும் 
           வரைவுடம் படா தாற்றா துரைத்தலும் 
           அதரிடைச் செலவிற் கிரக்கங்
      கூறலும் 
           இருளற நிலவு வெளிப்பட வருந்தலும் 
           வேற்றுக்குறி கூறலுங் கடலிடை வைத்துத் 
           துயரறி வித்தலும் தோழியு
      மின்றித் 
           தானே கிடந்து தனிமையுற் றாற்றும் 
           காம மிக்க கழிபடர் கிளவியும் 
           காப்புச்சிறை மிக்க கையறு
      கிளவியும் 
			
				
				 |