பொருளதிகாரம்301முத்துவீரியம்

ரிடத்தார் எம்மலர்சூடி, எச்சாந்தணிந்து, எம்மரநிழலின்கீழ் விளையாடுபவெனத் தலைமகனை
வினாதல்.

(வ-று.)

வரையன் றொருகால் இருகால் வளைய நிமிர்த்துவட்கார்
நிரையன் றழலெழ எய்துநின் றோன்றில்லை யன்ன நின்னூர்
விரையென்ன மென்னிழ லென்ன வெறியுறு தாதிவர்போ
துரையென்ன வோசிலம் பாநலம் பாவி யொளிர்வனவே. (திருக். 152)

(கு-ரை.) வரை - மேருமலை, வட்கார்-பகைவர்.

உட்கொண்டு வினாதல்

என்பது, கேட்டவினாவை யுட்கொண்டு, அந்நிலத்து மக்கள் கோலத்தனாய்ச்
செல்வானாக, நின்னூரிடத்து இராப்பொழுது, நுமரெம்மலரைச் சூடி, எச்சாந்தை யணிந்து,
என்ன மரநிழலின் கீழ்விளையாடுப வெனத், தலைமகன் தோழியை வினாதல்.

(வ-று.)

செம்மல ராயிரந் தூய்க்கரு மால்திருக் கண்ணணியும்
மொய்ம்மலர் ஈர்ங்கழ லம்பலத் தோன்மன்னு தென்மலயத்
தெம்மலர் சூடிநின் றெச்சாந் தணிந்தென்ன நன்னிழல்வாய்
அம்மலர் வாட்கணல் லாயெல்லி வாய்நுமர் ஆடுவதே. (திருக். 153)

குறியிடங் கூறல்

என்பது, உட்கொண்டு வினாவிய தலைமகனுக்கு, யாங்கள் சந்தனச் சாந்தணிந்து
சுனைக்காவிகள் சூடித், தோகைகள் துயிலும் வேங்கைப் பொழிற்கண் விளையாடுவேம்,
அவ்விடத்து நின்வரவறிய மயிலெழுப்புவாயாகவெனத், தோழி குறியிடங் கூறல்.

(வ-று.)

பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர்
புனைவளர் சாரற் பொதியின் மலைப்பொலி சந்தணிந்து
சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தே கை துயில்பயலுஞ்
சினைவளர் வேங்கைகள் யாங்கள்நின் றாடுஞ் செழும்பொழிலே. (திருக். 154)