பொருளதிகாரம் | 302 | முத்துவீரியம் |
இரவுக்குறியேற் பித்தல்
என்பது, தலைமகனுக்குக் குறியிடங்கூறித்
தலைமகளுழைச் சென்று, அந்திக் காலத்தோ
ரலவன்
றன் பெடையொடு பயிலக்கண்டு, ஒரு பெரியோன்
வருத்தமிக்குச் சென்றான்,
அதற்குப்பின் அவன் சேர்துயிலறிந்திலேனெனத்,
தோழி அவனாற்றாமை கூறித் தலைமகளை
யிரவுக்குறி யேற்பித்தல்.
(வ-று.)
மலவன் குரம்பையை
மாற்றியம் மான்முதல் வானர்க்கப்பாற்
செலவன்பர்க் கோக்குஞ் சிவன்றில்லைக்
கானலிற் சீர்ப்பெடையோ
டலவன் பயில்வது கண்டஞர் கூர்ந்தயில் வேலூரவோன்
செலவந்தி வாய்க்கண் டனனென்ன தாங்கொன்மன்
சேர்துயிலே. (திருக். 155)
(கு-ரை.) மால் முதலானவர்களுக்குரிய
நிலை, பதமுத்தி, அதற்கு அப்பாலுள்ள நிலை
அந்தமில்
இன்பத்து அழிவில் வீடு.
இரவரவுரைத்தல்
என்பது, அலவன்மேல் வைத்து,
இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு, அது
வழியாகநின்று,
வேட்கை மிகவால், யானைகள் நடுங்கச் சிங்கந்
திரியு மலைச்சரியிடத்து
வரவேண்டிச்
சொன்னான், இதற்கியாஞ் செய்வதென்னோ வெனத்,
தோழி தலைமகளுக்குத்
தலைமகனிரவரவு உரைத்தல்.
(வ-று.)
மோட்டங் கதிர்முலைப் பங்குடைத்
தில்லைமுன் னோன்கழற்கே
கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் மழைகுழுமி
நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள நாக நடுங்கச்சிங்கம்
வேட்டந் திரிசரி வாய்வரு
வான்சொல்லு மெல்லியலே. (திருக். 156)
(கு-ரை.) ‘முன்னோன் கழற்கே
கோட்டம் தரும் வெற்பன்’ என்றது பொது நீக்கித்
தனை நினையும் தன்மையைக் குறித்தது. கோட்டம்
- வணக்கம். குரு - நிறம். ‘குருவும்
கெழுவும் நிறனா
கும்மே’ என்பது தொல்காப்பியம்.
ஏதங்கூறி மறுத்தல்
என்பது, தலைமக னிரவரவுகேட்ட
தலைமகள், தனக்கவன் செய்த தலையளியும்,
உதவியும்
நினைக்கின்ற உள்ளத்தளாய், அரிதிரண்டு நின்று
யானை வேட்டஞ் செய்யும்
வல்லிருட்கண்,
வள்ளலை வாவென்று கூறத் தகுமோவென, ஏதங்கூறி
மறுத்தல்.
|