பொருளதிகாரம் | 303 | முத்துவீரியம் |
(வ-று.)
செழுங்கார் முழவதிர்
சிற்றம் பலத்துப் பெருந்திருமால்
கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழ லேத்தலர்போல்
முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய்
மொய்யிருள்வாய்
வழங்கா வதரின் வழங்கென்று மோவின்றெம்
வள்ளலையே. (திருக். 157)
குறைநேர்தல்
என்பது, ஏதங்கூறி மறுத்த தலைமகள்,
அவனாற்றானாகிய நிலைமைகேட்டு, யான்
புனலிடை வீழ்ந்து கெடப்புக, என்னுயிர் தந்த பெரியோர்க்குச்
சிறியேன்
சொல்லுவதறியேனென வுடம்பட்டு நேர்தல்.
(வ-று.)
ஓங்கு மொருவிட முண்டம்
பலத்தும்பர் உய்யவன்று
தாங்கு மொருவன் தடவரை வாய்த்தழங்
கும்மருவி
வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து
வாங்கு மவர்க்கறி யேன்சிறி யேன்சொல்லும்
வாசகமே. (திருக். 158)
குறைநேர்ந்தமை கூறல்
என்பது, தலைமகளைக்
குறைநயப்பித்துத் தலைமகனுழைச் சென்று, இற்றையாமத்
தெல்லா நின்னருண்மேல் நிற்கவேண்டித் துன்பமுற்றேன்,
நீ கருதியதும் முடிந்ததெனத்,
தோழி
தலைமகனுக்கவள் குறைநேர்ந்தமை கூறல்.
(வ-று.)
ஏனற் பசுங்கதி ரென்றூழ்க்
கழிய எழிலியுன்னிக்
கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா
யானிற்றை யாமத்து நின்னருண் மேனிற்க லுற்றுச்சென்றேன்
தேனக்க கொன்றையன் தில்லையு றார்செல்லுஞ் செல்லல்களே.
(திருக். 159)
(கு-ரை.) என்றூழ் - கோடை. கம்பலை
- (வெப்பம் நீங்கக் குறவர்கள் செய்யும்
தெய்வ
வழிபாட்டு) ஆரவாரம். செல்லல் - துன்பம். ‘செல்லல்
இன்னல் இன்னா மையே’
என்பது தொல்காப்பியம்.
யான் செல்லல் உற்றதால் நின் குறை முடிந்தது என்றாள்
தோழி.
|