பொருளதிகாரம்306முத்துவீரியம்

வருத்தந் தணிப்பான் போன்று, முலையொடு முனிந்து, அவளிறு மருங்குல் தாங்கிச்
சென்றணைதல்.

(வ-று.)

அகிலின் புகைவிம்மி யாய்மலர் வேய்ந்தஞ் சனமெழுதத்
தகிலுந் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்
இகலு மவரிற் றளருமித் தேம்ப லிடைஞெமியப்
புகிலு மிகவிங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. (திருக். 165)

முகங்கண்டு மகிழ்தல்

என்பது, மருங்கணை விறுதிக்கண் தலைமகள் முகமகிழ்ச்சி கண்டு, இவளும் யானும்,
மலரு மதியுமெனத், தலைமகன்றன் நயப்புணர்த்தி மகிழ்தல்.

(வ-று.)

அழுந்தே னரகத் தியானென் றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் றிகழ்பொழிற் றில்லைப் புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுத மிவள்யான் குரூஉச்சுடர்கொண்
டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர் வானத் திளமதியே. (திருக். 166)

பள்ளியிடத் துய்த்தல்

என்பது, மலர்மதிமேல் வைத்துக் கூறி மகிழ்வுற்றுப் பிரிகின்றவன், இப்பொழிலிடை
இனித் தனியேநின்று நீலப் பூக்களைக் கொய்யாது, நின்னரிய தோழியோடு
உன்னாயத்திடைச் சென்று துயில் பயில்வா யெனத் தலைமகளைப் பள்ளியிடத்துச்
செலுத்தல்.

(வ-று.)

சுரும்புறு நீலங்கொய் யற்றமி நின்று துயில்பயின்மோ
வரும்பெறற் றோழியொ டாயத்து நாப்பண் அமரரொன்னார்
இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்
துரும்புறச் செற்றகொற் றத்தெம்பி ரான்றில்லைச் சூழ்பொழிற்கே. (திருக். 167)

வரவு விலக்கல்

என்பது, தோழி தலைமகளைப் பள்ளியிடத்திற் சேர்த்திச்சென்று, இக்கல்லதர் இவள்
காரணமாக, நினக்கெளிதாயிற்