பொருளதிகாரம்307முத்துவீரியம்

றாயினும், இனி இவ் வாறொழுகற்பாலையல்லை யென, வரைவு பயப்பக் கூறித்
தலைமகனை வரவுவிலக்கல்.

(வ-று.)

நற்பகற் சோம னெரிதரு நாட்டத்தன் றில்லையன்ன
விற்பகைத் தோங்கும் புருவத் திவளின்மெய் யேயெளிதே
வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற
கற்பகச் சோலை கதுவுங்கன் னாடவிக் கல்லதரே. (திருக். 168)

ஆற்றாதுரைத்தல்

என்பது, வரைவுகடாவி வரவு விலக்கின தோழிக்கு வரைவுடம் படாது, பின்னும்
களவொழுக்கம் வேண்டி, யான்முன் செய்த தவப்பயனா லெனக் கெய்தலாம் வண்ணம்,
திருமகளிவ்வாறு கொடிச்சியா யிருந்தாளெனக் கருதியேயென தின்னுயிர் நிற்பது,
இத்தன்மையாளை யான் வரையும் துணை யெளியளாக நீ கூறுகின்ற தென்னெனத்,
தலைமகன்றன தாற்றாமை தோன்றக் கூறல்.

(வ-று.)

பைவா யரவரை யம்பலத் தெம்பரன் பைங்கயிலைச்
செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத் தோட்சிற் றிடைக்கொடியை
மொய்வார் கமலத்து முற்றிழை யின்றென்முன் னைத்தவத்தால்
இவ்வா றிருக்குமென் றேநிற்ப தென்றுமென் னின்னுயிரே. (திருக். 169)

இரக்கங்கூறி வரைவுகடாதல்

என்பது, களவுவிரும்பி வரைவுடம்படாத தலைமகனுக்கு, நீ செல்லு 
நெறிக்க ணினக்கிடையூறுண்டா மென்னு மச்சத்தால், அவளழுதிரங்கா நின்றாளென்று, நீ
சென்றமையறிய நின்குறி காட்டுவாயெனத், தலைமகள் இரக்கங் கூறி வரைவுகடாதல்.

(வ-று.)

பைவா யரவு மறியு மழுவும் பயின்மலர்க்கை
மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்கால்
செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்
மைவார் குவளை விடுமன்ன நீண்முத்த மாலைகளே. (திருக். 170)