| பொருளதிகாரம் | 308 | முத்துவீரியம் |  
  
நிலவு வெளிப்பட வருந்தல் 
      என்பது, இரக்கங்கூறி வரைவுகடாய தோழி,
      பிற்றை ஞான்று அவனிரவுக்குறியிடை 
      வந்து நிற்ப,
      நிலவு வெளிப்பாட்டாற் சென்றெதிர்ப்பட மாட்டாமல்
      தாங்கள் வருந்தா 
      நின்றமை சிறைப் புறமாக மதியொடு
      புலந்து கூறல். 
      (வ-று.) 
      நாகந் தொழவெழி லம்பல நண்ணி
      நடநவில்வோன் 
      நாக மிதுமதி யேமதி யேநவில் வேற்கையெங்கள் 
      நாகம் வரவெதிர் நாங்கொள்ளு நள்ளிருள்
      வாய்நறவார் 
      நாக மலிபொழில் வாயெழில் வாய்த்தநின்
      னாயகமே.
      (திருக். 171) 
      (கு-ரை.) நாகம் தொழ - பாம்புக்
      காலையுடைய பதஞ்சலி முனிவர் தொழ. நாகம் 
      - மலை.
      மதியே: விளி. மதியே - (இங்ஙனம் வெளிப்படுதல்)
      நினக்கு அறிவாகுமோ? 
      எங்கள் நாகம் - எங்கள்
      தலைவர். நறவுஆர் நாகம் - தேன் பொருந்திய நாக
      மலர். 
      அல்லகுறி யறிவித்தல் 
      என்பது, குறியல்லாத குறியெதிர்ப்பட்டு
      மீண்டமை பிற்றை ஞான்று தலைமகன் 
      சிறைப்புறம்
      வந்து நிற்பத், தோழி தலைமகளுக்குரைப்பாள்
      போன்று, அன்னத்தின்மேல் 
      வைத்தறிவித்தல். 
      (வ-று.) 
      மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன்
      தில்லையன்னா 
      யென்னங் கலமர லெய்திய தோவெழின்
      முத்தந்தொத்திப் 
      பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின்
      வாய்ப்புலம் புற்றுமுற்று 
      மன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே. (திருக். 172) 
      கடலிடைவைத்துத் துயரறிவித்தல் 
      என்பது, தலைமகளிரவுறு துயரம்,
      தலைமகன் சிறைப்புறமாக, இவள் வாட நீ 
      இரைகின்றாய்,
      இது நினக்கு ஈன்றோவெனத் தோழி கடலொடு
      புலந்து கூறல். 
      (வ-று.) 
      சோத்துன் னடியமென் றோரைக் குழுமித்தொல்
      வானவர்சூழ்ந் 
      தேத்தும் படிநிற்ப வன்றில்லை யன்னா
      ளிவடுவள 
			
				
				 |