| பொருளதிகாரம் | 309 | முத்துவீரியம் |  
  
ஆர்த்துன் னமிழ்துந் திருவு மதியு
      மிழந்தவநீ 
      பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய்
      பெருங்கடலே. (திருக். 173) 
      (கு-ரை.) சோத்தம் - இழிந்தார்
      செய்யும் வழிபாடு. 
      இறைவனுக்கு அடிமை செய்வாரை வானவர்
      சூழ்ந்து ஏத்துவர். ‘அமரர்கள் 
      சூழ்ந்திருப்ப
      அளித்துப் பெருஞ் செல்வ மாக்கும் ஐயாறன் அடித்தலமே’
      என்பதும் 
      காண்க. 
      காமமிக்க கழிபடர்கிளவி 
      என்பது, தலைமகனைக் காணலுற்று
      வருந்துகின்ற தலைமகள், தனது வேட்கை 
      மிகவாற்
      கேளாதனவற்றைக் கேட்பனவாக விளித்து, நீங்களென்னை
      ஏதுற்று 
      அழிகின்றாயென்று, ஒருகால் வினவுகின்றிலீர்,
      இதுவோ நுங் காதன்மையென அவற்றொடு 
      புலந்து கூறல். 
      (வ-று.) 
      மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில்
      லைநகர்சூழ் 
      போதுற்ற பூம்பொழில் காள்கழி
      காளெழிற் புள்ளினங்காள் 
      ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை
      வர்க்கிவளோ 
      தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை
      செப்புமினே. (திருக். 174) 
      காப்புச்சிறைமிக்க கையறுகிளவி 
      என்பது, காமமிக்கெதிர்ப்பட
      விரும்பிய தலைமகள், இவ்விடையீடெல்லா நீங்கி 
      யொருவழியான் வந்தாராயினும், இஞ்ஞாளி குரைக்கின்றமையின்,
      யாமிவரை 
      யெதிர்ப்படுதலரிதெனக், காப்புச்
      சிறைமிக்கு வருந்தல். 
      (வ-று.) 
      இன்னற வார்பொழிற் றில்லை நகரிறை
      சீர்விழவிற் 
      பன்னிற மாலைத் தொகைபக லாம்பல்
      விளக்கிருளின் 
      துன்னற வுய்க்குமில் லோருந்
      துயிலிற் றுறைவர்மிக்க 
      கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி
      குரைதருமே. (திருக். 175) 
      ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி 
      என்பது, சிறைப்புறமாகத் தலைமகளாற்றாமை
      கூறக்கேட்ட தலைமகன் குறியிடைச் 
      சென்று நிற்பத்,
      தோழி யெதிர்ப்பட்டு, நீ 
			
				
				 |