பொருளதிகாரம் | 310 | முத்துவீரியம் |
கான்யாறு பலவு நீந்திக், கைவேல்
துணையாக அஞ்சாது வந்தால், யாங்களிச்
சோலையிடத்துண்டாகிய
தெய்வத்துக் கஞ்சுவேம், அதனாலிவ்விருளிடை
வரற்பாலை
யல்லையெனத், தங்கள் அச்சங் கூறிவரவுவிலக்கல்.
(வ-று.)
தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி
யோன்கயிலை
நீருறு கான்யா றளவில நீந்திவந் தானினது
போருறு வேல்வயப் பொங்குரு மஞ்சுக
மஞ்சிவருஞ்
சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று
தூங்கிருளே. (திருக். 176)
தன்னுட்கையா றெய்திடுகிளவி
என்பது, தலைமகனைக் காணலுற்று
வருந்திய தலைமகள், இக்கண்டல் சான்றாகக்
கொண்டிப் புன்னையிடத்துக் கலந்த கள்வரை
யிவ்விடத்து வரக்கண்டிலையோ;
துணையில்லாதேற்கொரு
சொல்லருளாயென்று, தன்னுட்கையாற்றை மதியொடு
கூறி
வினாதல்.
(வ-று.)
விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண்
டில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக்
கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குலெல் லாமங்குல்
வாய்விளக்கு
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு
வாசகமே. (திருக். 177)
நிலைகண்டுரைத்தல்
என்பது, தலைமகள் தன்னுட் கையாற்றை
மதியொடு கூறி வருந்துகின்றமை
சிறைப்புறமாகக்
கேட்ட தலைமகன், ஆற்றாமை யானில்வரைப்பின்கட்
புகுந்து நிற்ப,
தோழி யெதிர்ப்பட்டு, நீயிவ்வாறு
இல்வரைப்பின்கட் புகுந்து நின்றால், கண்டவர்
நின்னைப் பெரும்பான்மை நினையாது மற்றொன்று
நினைப்பாராயின், அவளுயிர்
வாழவல்லளோ, இனியிவ்வா
றொழுகற்பாலை யல்லையென, வரைவு தோன்றக் கூறல்.
(வ-று.)
பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப்
பரன்பரங் குன்றினின்ற
புற்றொன் றரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்
|