| எழுத்ததிகாரம் | 32 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.) முற்கூறியவற்றுள்,
ஐயும் ஒளவும் கான்சாரியையும் பெறும். 
(வ-று.) ஐகான், ஒளகான். (110) 
இதுவுமது 
111. காரங் கான்கரம்
பெறுமிரு மைக்குறில். 
(இ-ள்.) உயிர்க்குறிலும்,
உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரமும் பெறும். 
(வ-று.) அகரம் அகாரம் அஃகான்.
மகரம் மகாரம் மஃகான்.
(111) 
மொழிமுதற் போலியும்
மொழியிடைப் போலியும் 
112. ச, ஞ, ய, முன் அ, ஐ, யாகு
முதலிடை. 
(இ-ள்.) ச, ஞ, யக்களுக்கு
முன்னின்ற அகரம் முதலினும் நடுவினும் ஐகாரமாகத் 
திரியும். 
(வ-று.) பசல்-பைசல், முரஞ்சு-முரைஞ்சு,
பயல்-பையல், அரயர்-அரையர். (112) 
மொழியிடைப் போலி 
113. ஐகான் யவ்வழி
நவ்வொடு சில்வழி1 
    ஞஃகா னுறழு மென்மனார்
புலவர். 
(இ-ள்.) தனி
ஐகாரத்துக்குப் பின்னும் யகரமெய்க்குப் பின்னும்
வருகிற நகரம் 
ஞகரமாகுஞ் சிலவிடங்களில். 
(வ-று.) ஐநூறு - ஐஞ்ஞூறு, நெய்
நின்று - நெய்ஞ்ஞின்று. (113) 
மொழியிறுதிப் போலி 
114. அஃறிணைப்
பெயர்ச்சொ லிறுதி மகாரம் 
    னகரமா மொரோவழி நாடுங்
காலே. 
(இ-ள்.)
மகரமெய்யிறுதியாகிய அஃறிணைப்
பெயர்ச்சொற்களிற் சில வகரம் 
னகரமாகத்
திரியும். 
1. நன் - எழுத் - 69 
			
				
				 |