பொருளதிகாரம்322முத்துவீரியம்

அருமையுரைத்தல்

என்பது, குறிப்புரைத்துப் போக்குடம்படுத்திய தோழிக்குக், கொங்கை பொறாது
நடுங்குமிடையை யுடையாளது மெல்லிய அடிக்கு, யான் செல்லும் வெஞ்சுரந் தகாது,
அதன்மேலு மெம்பதியுஞ் சேய்த்து, அதனால் நீ கருதுகின்ற காரியமிகவு
மருமையுடைத்தெனத், தலைமகன் போக்கருமை கூறாநிற்றல்.

(வ-று.)

மெல்லியல் கொங்கை பெரியமின் னேரிடை மெல்லடிபூக்
கல்லியல் வெம்மைக் கடங்கடுந் தீக்கற்று வானமெல்லாம்
சொல்லிய சீர்ச்சுடர்த் திங்களங் கண்ணித்தொல் லோன்புலியூர்
அல்லியங் கோதைநல் லாயெல்லை சேய்ததெம் அகனகரே. (திருக். 201)

ஆதரங்கூறல்

என்பது, போக்கருமை கூறிய தலைமகனுக்கு, நின்னோடு போகப்பெறின், அவளுக்கு
வெஞ்சுரமும் தண்சுரமாம், நீ யருமை கூறாது அவளைக்கொண்டுபோவெனத், தோழி
தலைமகளது ஆதரங்கூறல்.

(வ-று.)

பிணையும் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால்
அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே
இணையும் அளவுமில் லாவிறை யோனுறை தில்லைத்தண்பூம்
பணையும் தடமும் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே. (திருக். 202)

இறந்துபாடுரைத்தல்

என்பது, ஆதரங் கூறிய தோழி, நீ யுடன்கொண்டு போகாயாகில், அலரானும் காவல்
மிகுதியானும் நின்னை எதிர்ப்படுதல் அரிதாதலின், தடந்துறந்த கயல்போல
இறந்துபடுமெனத், தலைமகள் இறந்துபாடுரைத்தல்.

(வ-று.)

இங்கய லென்னீ பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக்
கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத லண்ணல் கடிகொடில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீயப் படர்தடத்துச்
செங்கய லன்றே கருங்கயற் கண்ணித் திருநுதலே. (திருக். 203)