பொருளதிகாரம் | 323 | முத்துவீரியம் |
கற்புநலனுரைத்தல்
என்பது, தலைமகனைப்
போக்குடம்படுத்திய தோழி, தலைமகளுழைச்
சென்று,
மகளிர்க்குப்
பாதுகாக்கப்படுவனவற்றுள் நாண்போலச்
சிறந்தது பிறிதில்லை.
அத்தன்மைத்தாகிய
நாணுங் கற்புப்போலச் சீரிய தன்றென உலகியல்
கூறுவாள் போன்று,
அவளுடன்போக்குத் துணியக்
கற்புநலங் கூறல்.
(வ-று.)
தாயிற் சிறந்தன்று நாண்டைய
லாருக்கந் நாண்டகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடுமெங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற் சிறந்த
மதிநுதலே. (திருக். 204)
துணிந்தமை கூறல்
என்பது, உலகியல் கூறுவாள்
போன்று கற்புவழி நிறுத்தி, எம்பெருமான்
நின்னை
நீரில்லாத வெய்யசுரத்தே
உடன்கொண்டு போவானாக நினையா நின்றான்.
இதற்கு
நின்கருத் தென்னோ வெனத், தோழி
தலைமகளுக்குத் தலைமகனினைவு கூறல்.
(வ-று.)
குயப்பாவை நின்குழல் வேங்கையம்
போதொடு கோங்கம்விராய்
நறப்பா டலம்புனை வார்நினை
வார்தம்பி ரான்புலியூர்
மறப்பான் அடுப்பதொர் தீவினை
வந்திடிற் சென்றுசென்று
பிறப்பான் அடுப்பினும்
பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே. (திருக். 205)
துணிவொடு வினாவல்
என்பது, தலைமகனினைவு கேட்ட
தலைமகள், அவனினைவின்படியே
துணிந்துநின்று,
இந்நீரில்லாத வெய்யசுரத்தே இப்பொழுதிவர்
நம்மை யுடன்கொண்டு
போகைக்குக்
காரணமென்னோ வெனத், தோழியை வினாவல்.
(வ-று.)
நிழற்றலை தீநெறி நீரில்லை
கானகம் ஓரிகத்தும்
அழற்றலை வெம்பரற் றென்பரென்
னோதில்லை யம்பலத்தான்
கழற்றலை வைத்துக்கைப் போதுகள்
கூப்பக்கல் லாதவர்போற்
குழற்றலைச் சொல்லிசெல்
லக்குறிப் பாகுநங் கொற்றவர்க்கே. (திருக். 206)
|