பொருளதிகாரம்324முத்துவீரியம்

போக்கறிவித்தல்

என்பது, இப்பொழுதவர் போகைக்குக் காரணமென்னோ வென்று கேட்ட
தலைமகளுக்கு, நீங்கள் உடலுமுயிரும் போல வொருவரை யொருவ
ரின்றியமையீராயினீர், இத்தன்மைத்தாகிய நுங் காதலையறிந்து வைத்தும் அவற்கு வருமே
தம் நினதென்றஞ்சி, யானவனை வரவு விலக்குவேன், அவனுமவ்வாறு
வருதலையொழிந்து வரைவொடுவரின், பொன் முதலாகிய வெல்லாவற்றையு நினக்கு
முலைப்பரிசம் பெறினும் நமர் நின்னைக் கொடார் கூறுமிடத்து, இதுவன்றோ நீரருஞ்சுரம்
போகைக்குக் காரணமென்று தோழி தலைமகனது போக்கறிவியா நிற்றல்.

(வ-று.)

காயமும் ஆவியும் நீங்கள்சிற் றம்பல வன்கயிலைச்
சீயமும் மாவும் வெரீஇவரல் என்பல் செறிதிரைநீர்த்
தேயமும் யாவும் பெறினுங் கொடார்நமர் இன்னசெப்பின்
தோயமும் நாடுமில் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே. (திருக். 207)

நாணிழந்து வருந்தல்

என்பது, உடன்கொண்டு போகைக்குக் காரணங் கேட்ட தலைமகள், ஒருநாளு
மென்னைவிட்டு நீங்காதென்னுடனே வளர்ந்த நாண், கற்பி னெதிர்நிற்கமாட்டாது தன்னை
விட்டு நீங்காத என்னைக் கழிவதாக, மகளி ரெழுபிறப்பின்கண்ணுங் குடியிற் பிறவா
தொழிகவெனத், தானதற்குப் பிரிவாற்றாமையான் வருந்தல்.

(வ-று.)

மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென்னொ டும்வளர்ந்த
பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக்
கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக
இற்பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. (திருக். 208)

துணிவெடுத்துரைத்தல்

என்பது, தலைமகளைக் கற்புவழி நிறுத்திச் சென்று, நின்னொடு போதுமிடத்து,
நீசெல்லுங் கற்சுரம் அவள் சிற்றடிக்கு நற்றளிராம் போலுமெனத், தோழி தலைமகனுக்கு,
அவள் துணிவெடுத்துக் கூறல்.