பொருளதிகாரம் | 325 | முத்துவீரியம் |
(வ-று.)
கம்பஞ் சிவந்த சலந்தரன் ஆகங்
கறுத்ததில்லை
நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுர
மாகுநம்பா
அம்பஞ்சி யாவம் புகமிக நீண்டரி
சிந்துகண்ணாள்
செம்பஞ்சி யின்மிதிக்
கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. (திருக். 209)
குறியிடங்கூறல்
என்பது, துணிவெடுத்துரைத்த தோழி,
தாழாது இவ்விருட்காலத்துக்
கொண்டுபோவாயாக,
யானவளைக் கொண்டு வருகிறேன், நீ முன்பு
வந்தெதிர்ப்பட்ட
அக்குறியிடத்து வந்து
நில்லெனத், தலைமகனுக்குக் குறியிடங் கூறல்.
(வ-று.)
முன்னோன் மணிகண்டம் ஒத்தவன்
அம்பலந் தம்முடிதாழ்த்
துன்னா தவர்வினை போற்பரந்
தோங்கும் எனதுயிரே
அன்னாள் அரும்பெற லாவியன் னாயரு
ளாசையினாற்
பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ
யாம்விழை பொங்கிருளே. (திருக் 210)
அடியொடு வழிநினைந்
தவனுளம்வாடல்
என்பது, தோழி குறியிடை
நிறுத்திப் போக, தலைமகனவ்விடத்தே நின்று,
அனிச்சப்பூப்போலும் அழகிய அடிகள் அழற்கடம்
போதுமென்றால், இதற்கென்ன துன்பம்
வந்தெய்துமோவெனத், தலைமகளடியொடு தான்
போகின்ற வழி நினைந்து தன்னுள்ளம்
வாடல்.
(வ-று.)
பனிச்சந் திரனொடு பாய்புனல்
சூடும் பரன்புலியூர்
அனிச்சந் திகழுமஞ் சீறடி யாவ
அழல்பழுத்த
கனிச்செந் திரளன்ன கற்கடம்
போந்து கடக்குமென்றால்
இனிச்சந்த மேகலை யாட்கென்கொ
லாம்புகுந் தெய்துவதே. (திருக். 211)
கொண்டுசென்றுய்த்தல்
என்பது, தலைமகன் குறியிடை
நின்று, அடியொடு வழி நினைந்து தன்னுள்ளம்
வாட,
அந்நிலைமைக்கண், நின்னுள்ளத்துக்
|