பொருளதிகாரம் | 326 | முத்துவீரியம் |
கருதியதனை யிப்பொழுது நினக்குத்
தெய்வந் தருகின்றது, என்தோழியையுங்
கொண்டுவந்தேன், நீ யிவளைக்
கைக்கொள்ளெனத், தோழி தலைமகளைக் கொண்டு
சென்று
அவனொடு கூட்டல்.
(வ-று.)
வைவந்த வேலவர் சூழ்வரத்
தேர்வரும் வள்ளலுள்ளந்
தெய்வந் தருமிருள் தூங்கும் முழுதும்
செழுமிடற்றின்
மைவந்த கோன்றில்லை
வாழ்த்தார் மனத்தின் வழுத்துநர்போல்
மொய்வந்த வாவி தெளியும்
துயிலுமிம் மூதெயிலே. (திருக். 212)
ஓம்படுத்துரைத்தல்
என்பது, கொண்டுசென்றுய்து,
இருவரையும் வலஞ்செய்து நின்று, மறைநிலை
திரியினும், கடன் முழுதும் வற்றினும், இவளிடத்து
நின்னருள் திரியாமற்
பாதுகாப்பாயெனத்,
தோழி தலைமகளைத் தலைமகனுக்
கோம்படுத்துரைத்தல்.
(வ-று.)
பறந்திருந் தும்பர் பதைப்பப்
படரும் புரங்கரப்பச்
சிறந்தெரி யாடிதென் றில்லையன்
னாடிறத் துச்சிலம்பா
வறந்திருந் துன்னரு ளும்பிறி
தாயின் அருமறையின்
றிறந்திரிந் தார்கலி
யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே. (திருக். 213)
வழிப்படுத்துரைத்தல்
என்பது, ஓம்படுத்துரைத்த தோழி,
ஆயமு மன்னையும் பின்வாராம லிவ்விடத்தே
நிறுத்தி, இவ்வூரிடத்துள்ள அலரையு மொருவாற்றா
னீக்கி, யானும் வந்து நுங்களைக்
காண்பேனாக,
நீயிருந் திருவொடு சென்று நும்பதியிடைச்
சேர்வீரென, இருவரையும்
வழிப்படுத்துரைத்தல்.
(வ-று.)
கண்டொல்லை யாயமு மௌவையு
நீங்கவிவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மையெம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீரின்பந் தந்தவன்
சிற்றம் பலநிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே. (திருக். 214)
|