பொருளதிகாரம் | 327 | முத்துவீரியம் |
மெல்லக்கொண்டேகல்
என்பது, தோழியை விட்டுடன்
கொண்டுபோகின்ற தலைமகன், நின்னொடு
சேறலான், இன்று இக்காடு திருந்தச்
செய்யப்பட்டாற்போலக் குளிர்ச்சியை
யுடைத்தாயிருந்தது, இனி நின் சீறடி வருந்தாமற்
பையச் செல்லெனத், தன்னாய
வெள்ளத்தோடும்
விளையாடுமாறுபோலத் தலைமகளை மெல்லக்
கொண்டு செல்லா
நிற்றல்.
(வ-று.)
பேணத் திருத்திய சீறடி
மெல்லச்செல் பேரரவம்
பூணத் திருத்திய பொங்கொளி
யோன்புலி யூர்புரையும்
மாணத் திருத்திய வான்பதி சேரும்
இருமருங்கும்
காணத் திருத்திய போலுமுன் னாமன்னு
கானங்களே. (திருக். 215)
அடலெடுத்துரைத்தல்
என்பது, மெல்லக்
கொண்டுபோகின்றவன், சேய்த்தாகச் சிலரை
வரக்கண்டு,
தலைமகள் பயப்பட, நின்
ஐயன்மாராயின் அஞ்சுவேனல்லது,
நால்வகைத்தானையுந்
திரண்டுவரினும்,
என்கையில் வடித்திலங்கா நின்ற எஃகின்
வாய்க்கு இரை போதாது,
இதனை யிவ்விடத்தே,
காண்பாயாக வென்று, அவள் பயந்தீரத்
தன்னடலெடுத்துரைத்தல்.
(வ-று.)
கொடித்தேர் மறவர் குழாம்வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னும் அம்பலத்தோன்
வடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்னைய ரென்னின்மன்னும்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்டோய் கனவரையே. (திருக். 216)
(கு-ரை.) ‘அமர்வரின் பெயர்க்குவன்
அஞ்சேன். நுமர்வரின் மறைகுவன்
மாஅயோளே’ என்னும்
சங்கப் பாடலின் கருத்தைத் தழுவி நிற்கிறது.
அயர்வகற்றல்
என்பது, அடலெடுத்துரைத்துப்
பயந்தீர்த்துக்கொண்டு போகிறவன்,
இத்துன்பக்
கடறுகடந்து சென்று, இப்பொழுதே
நாம் நம்பதிகாணப் புகாநின்றேம், இனி
நமக்கொரு
குறைவில்லையெனத் தலைமகள்
வழிவருத்தந் தீரக்கூறா நிற்றல்.
|