பொருளதிகாரம்329முத்துவீரியம்

வழிவிளையாடல்

என்பது, கண்டவர் மகிழக்கொண்டுசெல்லா நின்றவன், நெறிசெல் வருத்தத்தி
ளெகிழ்ந்த மேனியையுடைய நின்னைக் கண்டு, கண்கள் தம்மாற் கொள்ளும்
பயன்கொண்டனம், இனிச் சிறிதிருந்து, இக்கடுங் கானகந் தண்ணென்னு மளவுஞ் செவி
நிறைய நின்மொழிபருக வருவாயாக வெனத், தலைமகளுடன் விளையாடல்.

(வ-று.)

கண்கடம் மாற்பயன் கொண்டனம் கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி யாரப் பருக வருகவின்னே
விண்கட நாயகன் றில்லையின் மெல்லியல் பங்கெனங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங் கானகம் தண்ணெனவே. (திருக். 220)

நகரணிமை கூறல்

என்பது, இருவருந் தம்மு ளின்புற்றுச் செல்கின்றமை கண்டு, இனிச் சிறிது
நெறிசென்று, அக்குன்றைக் கடந்தால், நும்பதியாகிய நகர்விளங்கித் தோன்றும்,
அத்துணையுங் கடிது சென்மினென, எதிர்வருவார் அவர் நகரணிமை கூறல்.

(வ-று.)

மின்றங் கிடையொடு நீலியன் றில்லைச்சிற் றம்பலவர்
குன்றங் கடந்துசென் றானின்று தோன்றும் குரூஉக்கமலம்
துன்றங் கிடங்கும் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார்
சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேணகரே. (திருக். 221)

நகர்காட்டல்

என்பது, நகரணிமை கூறக்கேட்டின் புறக்கொண்டு போகுந் தலைமகன், அன்னந்
துன்னிப், பிறையணிந்து, சூலத்தை யுடைத்தாகிய மாளிகைமேற் கொடிநுடங்க,
மதிறோன்றாநின்ற அப்பெரிய நகர்காண் நம்முடைய நகராவதெனத், தலைமகளுக்குத்
தன்னகர் காட்டல்.

(வ-று.)

மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப்
பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர்