எழுத்ததிகாரம்33முத்துவீரியம்

(வ-று.) அகம்-அகன், முகம்-முகன்.

(வி-ரை.) னகர ஈற்று அஃறிணைப் பெயர்களிற் சில மகரமாகத் திரியும் என்றும்,
அங்ஙனம் மயங்காதன ஒன்பதுள என்றும் கூறுவர் தொல்காப்பியர். ஆனால் நன்னூலார் மகர ஈற்று அஃறிணைப் பெயர்களே னகரமாகத் திரியும் என்பர். இவ்வாசிரியர்
நன்னூலார் கருத்தைத் தழுவியுரைத்துள்ளார். இஃது ஆராயத் தக்கது. (114)

எழுத்தியல் முற்றிற்று.

2. மொழியியல்

சொல்

115. சொன்ன வெழுத்தினாற் சொல்வதே சொல்லாம்.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த வெழுத்துக்களா லியம்புவதே மொழியாகுமென்க.

(வி-ரை.)

‘‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்’’

என நன்னூலாரும் கூறுதல் காண்க. (1)

ஓரெழுத்தொருமொழி

116. உயிர்நெடி லேழு மோரெழுத் தொருமொழி.

(இ-ள்.) நெட்டெழுத்தேழு மோரெழுத் தொருமொழியாம்.

(வ - று.) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள.

ஆ-பசு, ஈ. தேன்வண்டு, ஊ-இறைச்சி, ஏ-அம்பு, ஐ-அழகு. ஓ-மதகுநீர் தாங்குபலகை
ஒள-கடித்தல்.

(வி-ரை.)

‘‘நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி’’

என்பர் தொல்காப்பியர். ஒளகாரம் நீக்கி ஆறென்பர் நன்னூலார். (2)

மொழியாகாத குற்றெழுத்துக்கள்

118. குற்றெழுத் தைந்துங் கொளாமொழி யென்ப.