பொருளதிகாரம் | 331 | முத்துவீரியம் |
யென்பாவைக்குத் தாரு மென்றாள்,
அவனும் வேண்டியது மறாது கொடுப்பானாதலிற்
பிறிதொன்று சிந்தியாது கொடுத்து
நீங்கினான், அன்றறியாப்பருவத்து
நிகழ்ந்ததனை,
உற்றார்க்குரியர் பொற்றொடி
மகளிர், கொண்டார்க்குரியர் கொடுத்தா
ரென்பதனை யின்று
உட்கொண்டாள் போலும்,
யானித்துணையு மறவேனென்று உடன்போக்குத்
தோன்றக் கூறித்,
தோழி அறத்தொடு நிற்றல்.
(வ-று.)
ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை
யாவருக் கும்மெளிதாந்
தாளரிக் குன்றிற்றன் பாவைக்கு
மேவித் தழறிகழ்வேற்
போளரிக் குந்நிக ரன்னா ரொருவர்
குரூ உமலர்த்தார்
வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட
லாயத்தெம் வாணுதலே. (திருக். 225)
கற்புநிலைக்கிரங்கல்
என்பது, தோழி அறத்தொடு
நிற்பக் கேட்ட செவிலி, இஃதறமாயினும், இவள்
பருவத்திற்குத் தகாது, அது கிடக்க, இனி அவளுக்கு
நன்மையாவது அவனை
வழிபடுவதல்லது பிறிதில்லை
யெனக் கற்புநிலைக் கிரங்கல்.
(வ-று.)
வடுத்தான் வகிர்மலர்
கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக்
கெடுத்தான் கெடலிறொல்
லோன்றில்லைப் பன்மலர் கேழ்கிளர
மடுத்தான் குடைந்தன் றழுங்க
அழுங்கித் தழீஇமகிழ்வுற்
றெடுத்தாற் கினியன வேயினி யாவன
எம்மனைக்கே. (திருக். 226)
கவன்றுரைத்தல்
என்பது, கற்புநிலைக்கிரங்கிய
செவிலி, நெருநலைநாள் முறுவலைத்தந்து,
முலைமுழுவித்தழுவி, நீ சிறிய விரகுகள் செய்த
வெல்லாம், இன்று அவ்வலிய
காட்டைச்
செல்லவேண்டிப் போலும், இதனை அப்பொழுதே
யறியப் பெற்றிலேன் என்று,
அவள் நிலை
நினைந்து கவலாநிற்றல்.
(வ-று.)
முறுவலக் காறந்து வந்தென் முலைமுழு
வித்தழுவிச்
சிறுவலக் காரங்கள் செய்தவெல்
லாமுழு துஞ்சிதையத்
|