பொருளதிகாரம்333முத்துவீரியம்

வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க
ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. (திருக். 230)

கிளிமொழிக்கிரங்கல்

என்பது, பிரிவாற்றாது வருந்துகின்றவள், அவள் போன போக்கன்றி, இக்கிள்ளை
யென்னெஞ்சை யீராநின்றதெனத், தன்றாய் செலவுணர்ந்து வருந்தாநின்ற கிளிமொழி
கேட்டிரங்கல்.

(வ-று.)

கொன்னுனை வேலம் பலவற் றொழாரிற்குன் றங்கொடியோள்
என்னணஞ் சென்றனள் என்னணஞ் சேரும் எனவயரா
என்னனை போயினள் யாண்டையள் என்னைப் பருந்தடுமென்
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்கின்றதே. 
                                                      (திருக். 231)

சுடரோடிரத்தல்

என்பது, கிளிமொழி கேட்டிரங்கா நின்றவள், பெற்றவென்னோடு தன் கிளியிருந்து
வருந்த, இதனையுந் துறந்து, அறிவு முதிர்ந்து, அழற்கடஞ் சென்றாள் முகத்தை
நின்கதிர்களான் வாட்டாது, தாமரை மலர்போல மலர்த்துவாயாக வெனச், சுடரோடிரந்து
கூறல்.

(வ-று.)

பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றிமிக்கு
நற்றேன் மொழியழற் கானடந் தாண்முகம் நானணுகப்
பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்றில்லைத் தேன்பிறங்கு
மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன்சுடர் வானவனே. (திருக். 232)

பருவநினைந்து கவறல்

என்பது, சுடரோடிரந்து வருந்துகின்றவள், கற்பிக்கு முது பெண்டீருமின்றித்,
தானவனுக்குச் செய்யத்தகுங் குற்றேவல் செய்யவல்லளோ வென்று, அவள்
பருவநினைந்து கவலா நிற்றல்.

(வ-று.)

வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவன்மற்றென்
மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாந்தில்லை யான்மலைவாய்